ரூ. 50 எடுத்ததற்கு 10 வயது மகனுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? கொடூர தந்தையை கைது செய்த போலீசார்
50 ரூபாய் எடுத்ததால் தந்தை ஒருவர் தனது மகனை அடித்தே கொன்றிருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் கல்வா நகரில் வசிப்பவர் சந்தீப் பிரஜாபதி. இவருக்கு 10 வயதில் ஒரு மகனும், ஆறு வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
பிரஜாபதியின் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்த சூழலில் பிரஜாபதியின் பர்ஸிலிருந்து அவரது மகன் 50 ரூபாய் எடுத்திருக்கிறார்.
இந்த சம்பவத்தை தெரிந்துகொண்ட சந்தீப் மகனை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதில் வலி தாங்க முடியாத மகன் மயக்கம் போட்டுவிட்டார்.
இதனையடுத்து மயங்கி விழுந்த மகனை போர்வையில் சுருட்டி வைத்துவிட்டு சென்றுவிட்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவல் அடிப்படையில் காவல் துறையினர் வந்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சந்தீப் பிரஜாபதி மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.
பெற்ற மகனை வெறும் 50 ரூபாய் எடுத்ததற்காக தந்தையே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க:
ABPNadu Exclusive: 'மோடி பிரதமராகும்போது, ஸ்டாலினால் முடியாதா?' - திருமாவளவன் நேர்காணல்!
sexual abuse : ஜிம்மில் வைத்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது, சிறுவன் தப்பியோட்டம்