மேலும் அறிய

Top Searched Recipes: சரக்கு முதல் சைட்டிஷ் வரை.. 2025ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் .. இட்லி தான் நம்பர் ஒன்..!

Top Searched Recipes 2025: இந்த ஓராண்டில் நாம் எண்ணற்ற விஷயங்களை கற்றிருப்போம். தெரிந்து வைத்திருப்போம். முயற்சி செய்திருப்போம். இது அனைத்து துறைகளிலும் பொருந்தும். அதில் உணவு, சமையல் என்பது எக்ஸ்ட்ரா வகையாகும்.

Google Year in Search: 2025ம் ஆண்டில் இணையத்தில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட உணவுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதனைக் கண்ட பலரும் நமக்கு சோறு தான் முக்கியம் என சிலாகித்து வருகின்றனர்.

முடிவுக்கு வரும் 2025

2025 ஆம் ஆண்டு முடிவுக்கு வரப்போகிறது. இந்த ஓராண்டில் நாம் எண்ணற்ற விஷயங்களை கற்றிருப்போம். தெரிந்து வைத்திருப்போம். முயற்சி செய்திருப்போம். இது அனைத்து துறைகளிலும் பொருந்தும். அதில் உணவு, சமையல் என்பது எக்ஸ்ட்ரா வகையாகும். சமைக்க தெரியாதவர்கள், சமைக்க கற்றிருக்கலாம். அப்படி சமைக்க தெரிந்தவர்கள் இந்தாண்டு ஏதாவது புதிதாக ஒரு உணவை செய்ய முயன்றிருப்பார்கள்.

முன்பெல்லாம் சமையல் செய்ய வேண்டும் என்றால் பெரியவர்களிடம் டிப்ஸ் கேட்பார்கள். அதுவும் இல்லாவிட்டால் சமையல் குறிப்பு புத்தகம் வாங்கி வைத்திருப்பார்கள். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி எந்த ஊரின் உணவை எப்படி செய்யலாம் என்பது தொடங்கி நாம் சாப்பிட நினைக்கும் உணவை சம்பந்தப்பட்ட ஹோட்டலில் இருந்தே வரவழைத்து வீட்டில் வைத்து சாப்பிடுவது வரை அனைத்தும் சாத்தியமாகி விட்டது. 

அதிகம் தேடப்பட்ட உணவுகள் 

பொதுவாக நாம் ஒரு உணவின் பெயரை கேட்டாலே அப்படி என்றால் என்ன என்பதை முதலில் இணையத்தில் தேடுவோம். அதனை வீட்டில் செய்யலாமா, கடையில் தான் வாங்க முடியுமா என பார்ப்போம். அடுத்ததாக நாம் எப்படி இதனை செய்யலாம் என தேடுவோம். அப்படியாக 2025ம் ஆண்டு இணையத்தில் அதிகம் தேடப்பட்ட உணவுகள் என்னெவென்று பார்க்கலாம். 

  • இந்த தேடலில் தமிழ்நாட்டின் பிரபல உணவான இட்லி தான் முதலிடத்தில் உள்ளது. உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய, எளிதில் செரிமானமாகக்கூடிய இட்லி உள்ளூர் தொடங்கி உலக நாடுகள் வரை பேமஸாக உள்ளது. இட்லி சட்னி தொடங்கி கறி குழம்பு வரை சைட்டிஸ் ஆக வைத்து சாப்பிடலாம்.
  • இரண்டாவது இடத்தில் Porn star martini உள்ளது. பெயரை கேட்டவுடன் தவறாக நினைக்க வேண்டாம். இது ஒரு காக்டெயில். வெண்ணிலா சுவையுள்ள Porn star martini ஷாட் கிளாஸ் ஷாம்பெயினுடன் சேர்க்கப்படுகிறது.
  • 3வது இடத்தில் உகாடிச்சே மோடக் உள்ளது. இது வேறொன்றுமில்லை. நம்மூர் கொழுக்கட்டை தான். விநாயகர் சதுர்த்தி பண்டிகையின்போது கொழுக்கட்டை என்றால் என்ன, எப்படி செய்வது என்பதை அதிகம் தேடியுள்ளார்கள்.
  • 4ம் இடத்தில் தேக்குவா (இனிப்பு பிஸ்கட்) என்ற பீகார், ஜார்க்கண்ட மாநில சிற்றுண்டி உள்ளது. இது கஜூரியா, கஜூர் எனவும் அழைக்கப்படுகிறது. கோதுமை மாவில் வெல்லம், நெய், தேங்காய், ஏலக்காய், பெருஞ்சீரகம் போன்ற பொருட்கள் சேர்த்து செய்யப்படுகிறது. 
  • 5ம் இடத்தில் உகாதி பச்சடி உள்ளது. இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, காரம், கசப்பான சுவைகளின் கலவையான இது புளி, வெல்லம், மாங்காய், மிளகு, உப்பு ஆகியவை கொண்டு தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி பண்டிகை அன்று செய்யப்படுகிறது.
  • 6ம் இடத்தில் பீட்ரூட் கஞ்சி உள்ளது. பீட்ரூட்டுடன் கேரட் கடுகு மற்றும் தேவையான மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் ஒரு உணவாகும். இது செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, குடல் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு பயன்படுகிறது. 
  • தமிழ்நாட்டில் மார்கழி மாதம் திருவாதிரை என்பது சிவ ஆலயங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது சிவனுக்குரிய களி செய்து படைக்கப்படும். பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு, நெய், தேங்காய் துருவல் ஆகியவை கொண்டு இது செய்யப்படுகிறது. இது 7வது இடத்தில் உள்ளது. 
  • எட்டாவது இடத்தில் Yorkshire Pudding உள்ளது. முட்டை, கோதுமை மாவு கலவையில் தண்ணீர் அல்லது பால் சேர்த்து செய்யப்படும் இந்த உணவு இப்போது பலரின் விருப்பமான சிற்றுண்டியாக மாறி வருகிறது. பார்ப்பதற்கு அப்பம் போன்று இருக்கும். 
  • 9வது இடத்தில் கோந்து கத்திரா (Gond Katira) இடம் பெற்றுள்ளது. பாரம்பரிய இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இது சரும ஆரோக்கியம், மலச்சிக்கல் பிரச்னைக்கு தீர்வு போன்ற பயன்களை வழங்குகிறது. 
  • 10ம் இடத்தில் கொழுக்கட்டை உள்ளது. இதனை தமிழில் தேடியிருக்கிறார்கள். தென்னிந்தியாவின் மிக பிரபலமான உணவான கொழுக்கட்டை பல்வேறு வகைகளில் செய்யப்படுகிறது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Gold Rate Jan.5th: பாத்தியா உன் வேலைய காட்டிட்டியே.! இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்; வெள்ளியும் அதிரடி உயர்வு
பாத்தியா உன் வேலைய காட்டிட்டியே.! இன்று ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்; வெள்ளியும் அதிரடி உயர்வு
ஓய்வூதிய திட்டம்: ஜாக்டோ ஜியோவின் அடுத்த அதிரடி! 2026-ல் புதிய அரசாணை, 10% பங்களிப்பு ரத்து!
ஓய்வூதிய திட்டம்: ஜாக்டோ ஜியோவின் அடுத்த அதிரடி! 2026-ல் புதிய அரசாணை, 10% பங்களிப்பு ரத்து!
Embed widget