Siddharth Tweet | சாய்னா நேவாலுக்கு எதிரான சித்தார்த்தின் மோசமான ட்வீட்.. தேசிய மகளிர் ஆணையம் புகார்..
தவறான உள்நோக்கத்துடன் அது சொல்லப்படவில்லை. எனது பதில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது - சித்தார்த்
பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணம் பாதியில் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலர் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
அந்தவகையில், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விவகாரம் குறித்து, “ தனது சொந்த பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டால், தன்னை பாதுகாப்பாக இருப்பதாக எந்த நாடும் கூறிக்கொள்ள முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை நான் கண்டிக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு நடிகர் சித்தார்த் பாலியல் ரீதியா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். அவரது ட்வீட்டுக்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
"COCK & BULL"
— Siddharth (@Actor_Siddharth) January 10, 2022
That's the reference. Reading otherwise is unfair and leading!
Nothing disrespectful was intended, said or insinuated. Period. 🙏🏽
இந்நிலையில் சித்தார்த் இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “தவறான உள்நோக்கத்துடன் அது சொல்லப்படவில்லை. எனது பதில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது” என பதிவிட்டுள்ளார்.
இந்தச் சூழலில், தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிரா டிஜிபிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், ‘பெண்களை அவமானபடுத்தும் வகையில் ட்வீட் செய்ததற்காக நடிகர் சித்தார்த் மீது இந்திய குற்றவியல் சட்ட பிரிவு 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 67 (ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல்) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
National Commission for Women chairperson writes to Twitter India "to immediately block actor Siddharth's tweet on shuttler Saina Nehwal, calls it "misogynist and outrageous."
— ANI (@ANI) January 10, 2022
The actor later said, "Nothing disrespectful was intended, reading otherwise is unfair." pic.twitter.com/ln6SCBs9fG
மேலும், இதனை தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ள தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா, நடிகரின் ட்விட்டர் கணக்கை முடக்க வேண்டும் எனவும், சாய்னா நேவாலின் பதிவிற்கு, அருவருக்கத்தக்க வகையில் பதிவிட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்