எல்லாவற்றிற்கும் நன்றி, சோனு! ஸ்பைஸ்ஜெட் .
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுவதில் நடிகர் சோனு சூட்டின் மனிதாபிமான முயற்சிகளை ஒப்புக் கொண்ட ஸ்பைஸ்ஜெட், அவரை கவரவிக்கும் வகையில் அவரின் புகைப்படத்தை விமானத்தில் ஒட்டியுள்ளது .
கடந்த வருடம் கொரோனா நேரத்தில் நம்மை மிகவும் கவர்ந்தவர் நடிகர் சோனு சூட், மக்கள் தங்களின் சொந்த இடத்திற்கு செல்ல முடியாமல் தவித்து நின்றவர்களுக்கு பெரியளவில் உதவியவர் நடிகர் சோனு சூட். லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுவதில் நடிகர் சோனு சூட்டின் மனிதாபிமான முயற்சிகளை வாழ்த்தும் விதமாக ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம், அவரை கவுரவிக்கும் வகையில் அவரின் புகைப்படத்தை விமானத்தில் ஒட்டியுள்ளது. லட்சக்கணக்கான மக்களை தங்களின் சொந்த ஊர்களுக்கும், உறவினர்களுடனும் இணைத்த பெருமை சோனுவையே சேரும் என்று ஸ்பைஸ்ஜெட் தனது பாராட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், அவரது மகத்தான முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்க சரியான வழி எதுவுமில்லை என்றாலும், அவரை மற்றும் அவரது அற்புதமான பங்களிப்புகளை ஒப்புக் கொள்ள இது ஸ்பைஸ்ஜெட்டின் ஒரு சிறிய சைகை என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. "எங்கள் அழகான போயிங் 737 விமானத்தில் சோனுவின் புகைப்படத்தை பொருத்தி. எல்லாவற்றிற்கும் நன்றி, சோனு! நீங்கள் எங்களுக்கும் பலருக்கும் ஒரு உத்வேகம். உங்கள் அசாதாரண இரக்கத்தின் செயல்களில் உங்கள் பங்காளிகளாக இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்" என்று ஸ்பைஸ்ஜெட் தனது பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துள்ளது.

The phenomenally-talented @SonuSood has been a messiah to lakhs of Indians during the pandemic, helping them reunite with their loved ones, feed their families and more. (1/3) pic.twitter.com/8wYUml4tdD
— SpiceJet (@flyspicejet) March 19, 2021

கொரோனா நேரத்தில் தான் செய்த உதவி பற்றி கூறிய சோனு சூட், பல படங்களில் சிறப்பு வேடங்களில் நடித்து இருந்தாலும், கொரோனா நேரத்தின்போது வகித்த பாத்திரமே தனது தொழில் வாழ்க்கையின் மிக முக்கியமான பாத்திரம் என்று தெரிவித்துள்ளார் .
தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்பைஸ்ஜெட் செய்த செயலுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் சோனு சூட், பின்னர் தான் எப்படி மோகாவில் இருந்து மும்பை பணம் இல்லாமல் எப்படி வந்தேன் என்பதை உணர்கிறேன். இந்த தருணத்தில் என் தாய் தந்தையின் இன்மை உணர்கிறேன் என்று மிகுந்த நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருக்கிறார் .

Remember coming from Moga to Mumbai on an unreserved ticket.
Thank you everyone for all the love. Miss my parents more. @flyspicejet pic.twitter.com/MYipwwYReG
— sonu sood (@SonuSood) March 20, 2021

சோனுசூட் ! அனைத்திற்கும் நன்றி.