Crime : சிறுநீரை குடிக்கவைத்த பாஜக நிர்வாகி.. பணியாளருக்கு நேர்ந்த கொடூரம்.. பதைபதைக்க வைத்த சம்பவம்
ஜார்க்கண்ட் பாஜக நிர்வாகி சீமா பத்ரா, தனது வீட்டு உதவியாளரை அடைத்து வைத்து கொடூரமாக சித்திரவதை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பாஜக அவரை நேற்று கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தது.
ஜார்க்கண்ட் பாஜக நிர்நாகி சீமா பத்ரா, தனது வீட்டு உதவியாளரை அடைத்து வைத்து கொடூரமாக சித்திரவதை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பாஜக அவரை நேற்று கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தது. இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜகவின் மகளிர் அணி தேசிய செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தவர் பத்ரா. இவரது கணவர் மகேஷ்வர் பத்ரா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர்.
ஜார்கண்ட் பாஜக தலைவர் தீபக் பிரகாஷ், பத்ரா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். வீட்டின் உதவியாளரை பத்ரா சித்திரவதை செய்து கொடுமைபடுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதையடுத்து, பாஜக நடவடிக்கை எடுத்தது. பதைபதைக்க வைக்கும் வீடியோவில், சுனிதா என்ற பெண் மருத்துவமனை படுக்கையில் படுத்திருக்கிறார். அவரது வாயில் பற்களே இல்லை.
அவரால் உட்கார கூட முடியவில்லை. அவரது உடலில் ஏற்பட்ட காயம், அவர் மோசமாக தாக்கப்பட்டிருப்பதையே சுட்டிகாட்டுகிறது. இந்த காட்சிகள் பலத்த எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளன. பலர் பத்ராவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார்.
தற்போது 29 வயதாகும் சுனிதா, ஜார்கண்டில் உள்ள கும்லாவைச் சேர்ந்தவர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பட்ராஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். இவர்களது மகள் வத்சலா வேலை நிமித்தமாக டெல்லிக்கு சென்று கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக சுனிதா சென்றார். சுமார், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வத்சலாவும் சுனிதாவும் ராஞ்சிக்குத் திரும்பினர்.
அடுத்த ஆறு ஆண்டுகளில், பத்ராவால் கொடூரமான சித்திரவதைக்கு ஆளானதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். மிகுந்த வேதனையுடன் பேசிய சுனிதா, தவா மற்றும் கம்பியால் அடிக்கப்பட்டதையும், பற்கள் அடித்து நொறுக்கப்பட்டதை பற்றியுன் பேசினார். சுனிதாவை தரையில் இருந்து சிறுநீரை நக்க வைத்துள்ளார் பத்ரா.
இந்த சித்திரவதை தனக்கு ஒரு தண்டனையாக வழங்கப்பட்டதாகவும் ஆனால், தான் செய்த தவறுகள் என்னவென்று தனக்குத் தெரியாது என்றும் சுனிதா கூறினார். பத்ராவின் மகன் ஆயுஷ்மான் தனக்கு உதவி செய்ததாக சுனிதா கூறியுள்ளார். "அவரால் தான் நான் உயிருடன் இருக்கிறேன்" என அவர் வலியிலும் கண்ணீருக்கும் மத்தியில் பேசியுள்ளார். சுனிதாவின் சகோதரி மற்றும் மைத்துனருக்கு அவரின் நிலை பற்றித் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் அவரை அழைத்துச் செல்ல மறுத்துவிட்டனர். உடல் நிலை சரியான பிறகு, படிக்க விரும்புவதாகவும் சுனிதா கூறியுள்ளார். பத்ராவின் மகன் ஆயுஷ்மான் தான் சுனிதாவின் நிலையை தோழி ஒருவரிடம் கூறி அவரிடம் உதவி கேட்டுள்ளார். பின்னர் அவரது நண்பர் போலீசில் புகார் செய்தார், அதைத் தொடர்ந்து சுனிதா மீட்கப்பட்டார். தற்போது ராஞ்சியில் உள்ள RIMSல் சிகிச்சை பெற்று வருகிறார் சுனிதா.