மேலும் அறிய

Supreme Court : நீங்க ஆள்ற மாநிலங்கள்னு வந்துட்டா ஒன்னும் பண்றதில்ல.. மத்திய அரசை வெளுத்துவாங்கிய உச்ச நீதிமன்றம்

நாகாலாந்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது.

பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாடு, தெலங்கானா, கேரளா, டெல்லி என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தங்கள் மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் இயற்றப்படும் சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை என அந்தந்த மாநில அரசுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் பாகுபாடு காட்டுகிறதா பாஜக?

இந்த நிலையில், நாகாலாந்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு என 33 சதவிகிதம் இடஒதுக்கீடு அமலில் உள்ளது. 

ஆனால், தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி - பாஜக கூட்டணி அரசு நாகாலாந்தில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் உள்ளது. இதனால், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்திய பிறகே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும், உச்ச நீதிமன்ற உத்தரவை நாகாலாந்து அரசு பின்பற்றவில்லை. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதன்ஷு துலியா ஆகியோர் கொண்ட அமர்வு, நாகாலாந்து அரசையும் மத்திய அரசையும் சாடியது. நாகாலாந்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்கான அரசியலமைப்பு விதிகள் அமல்படுத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் மீண்டும் தெரிவித்துள்ளது.

மத்திய அரசை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்:

ஒரே கட்சி (பாஜக / தேசிய ஜனநாயகக் கூட்டணி) மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சியில் இருந்தும், மத்திய அரசு ஏன் எதையும் செய்யவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ், "மாநிலத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு" என்றார்.

இதை தொடர்ந்து பேசிய சஞ்சய் கிஷன் கவுல், "மத்திய அரசு தயங்க காட்டுகிறது என எங்களை சொல்ல வைக்காதீர்கள். அரசியலமைப்புச் சட்டம் அமல்படுத்தப்படாத நிலையில் நீங்கள் என்ன செய்தீர்கள்? எங்களுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என நீங்கள் சொல்லி விட முடியாது. இதை நாங்கள் ஏற்க மாட்டோம்.

மற்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் மாநில அரசாங்கத்துடன் இணக்கமாக இல்லாத சூழலில், நீங்கள் நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். ஆனால், இங்கே மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் உள்ளது. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? நீங்கள் சொல்வதை நாங்கள் ஏற்று கொள்ள மாட்டோம்.

நம் நாட்டில் சட்டத்தால்தான் சமூக மாற்றம் நிகழ்கிறது. சட்டம் அதற்கு உத்வேகத்தை அளிக்கிறது. மற்றபடி எல்லா இந்து ஆண்களும் ஒரு மனைவியை எளிதில் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா? மகள்களுக்குச்  சொத்தில் சம பங்கைக் கொடுப்பார்களா? அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் சமத்துவத்தை வழங்குகிறது. அரசியலமைப்பையும் நாம் அமல்படுத்த வேண்டும். அமல்படுத்துவோம் என சொல்லிவிட்டு பின்வாங்கியுள்ளீர்கள்" என தெரிவித்தார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK Alliance: திமுக-வின் மாஸ்டர் ப்ளான்.. வெற்றிக்கு இதான் வழி! கூட்டணி கட்சிகள் என்ன பண்ணுமோ?
DMK Alliance: திமுக-வின் மாஸ்டர் ப்ளான்.. வெற்றிக்கு இதான் வழி! கூட்டணி கட்சிகள் என்ன பண்ணுமோ?
2026 தேர்தல்: ஸ்டாலின் வின்னிங் ஃபார்முலா! தமிழ்நாடு vs NDA போர்! திமுக தொண்டர்கள் ஆரவாரம்!
2026 தேர்தல்: ஸ்டாலின் வின்னிங் ஃபார்முலா! தமிழ்நாடு vs NDA போர்! திமுக தொண்டர்கள் ஆரவாரம்!
Manickam Tagore vs DMK: ‘மாணிக்கம் தாகூரை வைத்து திமுகவை சீண்டுவது யார்?’ பின்னணியில் இவரா? – பரபரப்பு தகவல்கள்..!
‘மாணிக்கம் தாகூரை வைத்து திமுகவை சீண்டுவது யார்?’ பின்னணியில் இவரா? – பரபரப்பு தகவல்கள்..!
DMK: 70 தொகுதிகளில் மட்டும் தீவிரமா வேலை பாக்கப்போகும் திமுக - என்ன காரணம் தெரியுமா?
DMK: 70 தொகுதிகளில் மட்டும் தீவிரமா வேலை பாக்கப்போகும் திமுக - என்ன காரணம் தெரியுமா?
ABP Premium

வீடியோ

Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |
Pattimandram Raja Caste Controversy | ’’நீங்க என்ன ஆளுங்க?’’பெண்ணிடம் சாதியைக் கேட்ட பட்டிமன்ற ராஜா
Annamalai RSS meeting | ”உங்ககிட்ட PLAN-ஏ இல்ல” ஓபனாக கேட்ட அண்ணாமலை! புது பதவி கொடுக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Alliance: திமுக-வின் மாஸ்டர் ப்ளான்.. வெற்றிக்கு இதான் வழி! கூட்டணி கட்சிகள் என்ன பண்ணுமோ?
DMK Alliance: திமுக-வின் மாஸ்டர் ப்ளான்.. வெற்றிக்கு இதான் வழி! கூட்டணி கட்சிகள் என்ன பண்ணுமோ?
2026 தேர்தல்: ஸ்டாலின் வின்னிங் ஃபார்முலா! தமிழ்நாடு vs NDA போர்! திமுக தொண்டர்கள் ஆரவாரம்!
2026 தேர்தல்: ஸ்டாலின் வின்னிங் ஃபார்முலா! தமிழ்நாடு vs NDA போர்! திமுக தொண்டர்கள் ஆரவாரம்!
Manickam Tagore vs DMK: ‘மாணிக்கம் தாகூரை வைத்து திமுகவை சீண்டுவது யார்?’ பின்னணியில் இவரா? – பரபரப்பு தகவல்கள்..!
‘மாணிக்கம் தாகூரை வைத்து திமுகவை சீண்டுவது யார்?’ பின்னணியில் இவரா? – பரபரப்பு தகவல்கள்..!
DMK: 70 தொகுதிகளில் மட்டும் தீவிரமா வேலை பாக்கப்போகும் திமுக - என்ன காரணம் தெரியுமா?
DMK: 70 தொகுதிகளில் மட்டும் தீவிரமா வேலை பாக்கப்போகும் திமுக - என்ன காரணம் தெரியுமா?
Holiday Special Bus: 2 நாள் தொடர் விடுமுறை, மஹாசிவராத்திரிக்கு சிறப்பு பேருந்து.! போக்குவரத்து துறை சூப்பரான அறிவிப்பு
2 நாள் தொடர் விடுமுறை, மஹாசிவராத்திரிக்கு சிறப்பு பேருந்து.! போக்குவரத்து துறை சூப்பரான அறிவிப்பு
டீக்கடை தகராறு... ரத்த வெள்ளத்தில் பிரபல ரவுடி: கிரைண்டர் கல்லால் தாக்கிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
டீக்கடை தகராறு... ரத்த வெள்ளத்தில் பிரபல ரவுடி: கிரைண்டர் கல்லால் தாக்கிய கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!
Anna University Protest: அனுமதி மறுப்பு; கொளுத்தும் வெயிலில் அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம்; 9ம் நாளாக நீடிக்கும் அவலம்!
Maha Shivaratri 2026: மகா சிவராத்திரி விரதம் யாரெல்லாம் இருக்கக் கூடாது? - சிவனின் ஆசியைப் பெறுவது எப்படி?
மகா சிவராத்திரி விரதம் யாரெல்லாம் இருக்கக் கூடாது? - சிவனின் ஆசியைப் பெறுவது எப்படி?
Embed widget