Super blood moon | இன்று சந்திர கிரகணம்: தமிழகத்தில் தெரியுமா சூப்பர் சிவப்பு நிலா?
சந்திர கிரகண நிகழ்வு இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு இந்தியாவில் பாதி சந்திர கிரகணம் மாலை 3.15 மணிக்கு தொடங்கும். மாலை 4.58 மணிக்கு முழு சந்திர கிரகணம் இந்தியாவில் முடிவு பெரும்.
![Super blood moon | இன்று சந்திர கிரகணம்: தமிழகத்தில் தெரியுமா சூப்பர் சிவப்பு நிலா? Super blood moon: Partial lunar eclipse in India on May 26 Super blood moon | இன்று சந்திர கிரகணம்: தமிழகத்தில் தெரியுமா சூப்பர் சிவப்பு நிலா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/26/89e12ac9cfe0ab035679198689911de2_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பூமி சூரியனை எவ்வாறு வட்டப்பாதையில் சுற்றுவதைப்போல், சந்திரன் பூமியை வட்டப்பாதையில் சுற்றுகிறது. இதனால் பூமி, சந்திரன், நிலவு ஒரே பாதையில் நேராக இருக்கும் போது சூரிய கிரகணம் அல்லது சந்திர கிரகணம் ஏற்படும். இதில் சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவே பூமி ஒரே நேர் கோட்டில் இருக்கும் போது சந்திர கிரகணம் வரும். அதாவது பூமியின் நிழல் சந்திரன் மேல் படுவதற்கு பெயர்தான் சந்திர கிரகணம். இப்படியான சில சந்திர கிரகணத்தின் போது நிலா பெரியதாகவும், பிரகாசமாகவும் இருக்கும். அப்படியான நிலாவை சூப்பர் சிவப்பு நிலா என்கிறோம்.
சூப்பர் சிவப்பு நிலாவானது சூப்பர் மூன் மூலம் ஏற்படுகிறது. அதாவது பூமியை நிலவு சுற்றி வரும் போது பூமிக்கு அருகிலும் தொலைவிலும் வரும். சந்திரன் பூமிக்கு மிக அருகே வரும் போது சந்திரன் சற்று பெரிதாக தெரியும். இதற்கு பெயர் தான் சூப்பர்மூன். அந்த நேரத்தில் சந்திர கிரகணம் ஏற்பட்டால் அது சூப்பர் சிவப்பு நிலவு என்று அழைக்கப்படும். ஏனென்றால் சூரியனிலிருந்து வரும் ஒளி பூமியின் மேல் பட்டு பிரதிபலிப்பு மாறுபட்டு வரும். அப்போது காற்றில் சிறிய அலைநீளம் கொண்ட ஒளி நிறங்கள் அதிகளவில் சிதறிவிடும். இறுதியில் அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்கள் மட்டும் நிலவை அடையும். இதனால் நிலவு இந்த இரு நிறங்களில் காணப்படும்.
இந்தியாவில் பாதி சந்திர கிரகணம் இன்று மாலை 3.15 மணிக்கு தொடங்கும். மாலை 4.58 மணிக்கு முழு சந்திர கிரகணம் இந்தியாவில் முடிவு பெரும். எனினும் பாதி சந்திர கிரகணம் இந்தியாவில் இரவு 6.23 மணிவரை தெரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திர கிரகணத்தின் போது நிலவு சூப்பர் சிவப்பு நிலவு (Super blood moon)என்று அழைக்கப்படுகிறது.
கொல்கத்தா, பூரி, அகர்தாலா, சில்லாங், சிப்சாகர்,இம்பால், போர்ட் பிளேர் உள்ளிட்ட இடங்களில் பாதி சந்திர கிரணம் தெரியும். தமிழ்நாட்டில் சந்திர கிரகணம் தெரிய வாய்ப்பு இல்லை. அடுத்த சந்திரகிரகணம் வரும் நவம்பர் மாதம் 19 தேதி இந்தியாவில் தெரியும் எனக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை கிரகணம் நிகழும் போது தமிழகத்தில் அது தொடர்பான சில மூடநம்பிக்கைகள் கடைபிடிக்கப்படுவது வழக்கம். அதே போன்று இந்த கிரகணத்தின் போதும், மதியம் 2 மணிக்குள் சாப்பிட்டு விட வேண்டும் என்பது போன்ற சில மூடநம்பிக்கைகளை சமூக வலைதளங்களில் பலர் பரப்பி வருகின்றனர். அது மாதிரியான எந்த அறிவியல் அறிவுறுத்தல் இல்லாத நிலையில், சிலர் கிரகண பாதிப்புகளை தவிர்க்க வீட்டு வழிபாடும் நடத்தி வருகின்றனர்.
'நம் உடலில் கொரோனா எதிர்ப்புசக்தி எவ்வளவு இருக்கு?' - கண்டுபிடிக்க வந்துவிட்டது புதிய பரிசோதனை!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)