மலையாளமும் இந்திய மொழி தான்; மொழி பாகுபாட்டை நிறுத்துங்கள் - ராகுல் காந்தி கண்டனம்

மலையாளமும் இந்திய மொழிகளுள் ஒன்றுதான்; மொழிபேதத்தை நிறுத்துங்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மிகக்காட்டமாக தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US: 

டெல்லியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில் செவிலியர் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும், மலையாளத்தில் பேசினால் மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. 

நர்ஸிங் சூப்பிரன்டன்ட் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஜிப்மரில் மலையாள மொழி பயன்பாடு தொடர்பாக ஒரு புகார் வந்துள்ளது. பணியிடத்தில் சில செவிலியர் மலையாள மொழியிலேயே பேசிக் கொள்கின்றனர். பெரும்பாலான நோயாளிகளும், பணியாளர்களும் மலையாள மொழி அறியாதவர்கள். இதனால், அவர்களுக்கு அசவுகரியம் ஏற்படுகிறது. எனவே, மருத்துவமனை ஊழியர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும். மீறினால் மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மலையாளமும் இந்திய மொழி தான்; மொழி பாகுபாட்டை நிறுத்துங்கள் - ராகுல் காந்தி கண்டனம்

இதுதொடர்பாக ஊடகங்கள் பலவும் கேள்வி எழுப்பியும் டெல்லி அரசாங்கமோ அல்லது ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் அர்ச்சனா தாகூரும் எவ்வித விளக்கமும் கூறவில்லை. ஆனால் இது தொடர்பாக ஜிப்மரில் பணியாற்றிவரும் கேரள நர்ஸ் ஒருவர் கூறும்போது, யாரோ ஒரு நோயாளி நர்ஸ்கள் தங்களுக்குள் மலையாள மொழியில் பேசிக் கொள்வது புரியவில்லை எனக் கூறியதால், தலைமைச் செயலகத்திலிருந்து இந்த சுற்றறிக்கை வந்திருப்பதாகக் கூறபப்டுகிறது. இது மிகவும் தவறு. இங்குள்ள 60% நர்ஸிங் ஊழியர்கள் கேரளாவிலிருந்து வந்தவர்களே. நாங்கள் யாரும் நோயாளிகளிடம் மலையாளத்தில் பேசுவதில்லை. இங்கு மணிப்பூரி, பஞ்சாபி நர்ஸ்களும் உள்ளனர். அவரவர் அவரவர் மாநிலத்தவர்களுடன் பேசும்போது சொந்த மொழியைப் பேசுவது இயல்பே. இது பிரச்சினையே இல்லை எனக் கூறினார். இந்நிலையில், டெல்லி ஜிப்மரின் உத்தரவுக்கு டெல்லி எய்ம்ஸ், எல்என்ஜிபி, ஜிடிபி மருத்துவமனைகளின் மலையாள நர்ஸ் கூட்டமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.மலையாளமும் இந்திய மொழி தான்; மொழி பாகுபாட்டை நிறுத்துங்கள் - ராகுல் காந்தி கண்டனம்

மேலும் கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பியும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதேபோல், காங்கிரஸ் எம்.பி. சசி தரூரும் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர், "சுதந்திர நாட்டில் அரசு இயந்திரங்கள் இதுபோன்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஊழியர்கள் அவர்களுக்குள் பேசும்போது சொந்த மொழியில் பேசுவதில் என்ன தவறு. இது ஏற்புடையது அல்ல. மிகவும் கொடூரமானது. மற்றவர்களை புண்படுத்துவதும் கூட. மனித உரிமைகளுக்கும், இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளும் எதிரானது" எனக் காட்டமாகப் பதிவிட்டிருக்கிறார்.

Venkaiah Naidu Twitter | மறுபடியுமா!! மீண்டும் வெங்கையா நாயுடு அக்கவுண்ட்டுக்கு ப்ளூ டிக் கொடுத்தது ட்விட்டர்மலையாள மொழிக்கு எதிரான டெல்லி ஜிப்மரின் சுற்றறிக்கைக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Tags: rahul gandhi malayalam nurse jipmer

தொடர்புடைய செய்திகள்

Woman IPS Officers | இந்தியாவை திரும்பிப் பார்க்கவைத்த பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் யார்? என்ன செய்தார்கள்?

Woman IPS Officers | இந்தியாவை திரும்பிப் பார்க்கவைத்த பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் யார்? என்ன செய்தார்கள்?

அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டாயமில்லை: வெளியுறவுத் துறை அமைச்சகம்

அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டாயமில்லை: வெளியுறவுத் துறை அமைச்சகம்

Japnese Miyazaki Mangoes: ஒரு மாம்பழம் ரூ.27 ஆயிரமா... ஆட்களுடன் 6 நாய்கள் பாதுகாப்பு போட இது தான் காரணம்!

Japnese Miyazaki Mangoes: ஒரு மாம்பழம் ரூ.27 ஆயிரமா... ஆட்களுடன் 6 நாய்கள் பாதுகாப்பு போட இது தான் காரணம்!

Stalin Gift to PM Modi : ’பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த பரிசு  என்ன தெரியுமா.. ?

Stalin Gift to PM Modi : ’பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த பரிசு  என்ன தெரியுமா.. ?

MK Stalin Meet Soina Gandhi : ’மு.க.ஸ்டாலின் சோனியாவுக்கு பரிசளித்த புத்தகம்’ கூகுளில் தேடும் இளைஞர் பட்டாளம்..!

MK Stalin Meet Soina Gandhi : ’மு.க.ஸ்டாலின் சோனியாவுக்கு பரிசளித்த புத்தகம்’ கூகுளில் தேடும் இளைஞர் பட்டாளம்..!

டாப் நியூஸ்

BREAKING: தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

BREAKING: தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

NEET Exam 2021: நீட் தேர்வை நடத்த திட்டம்? - விரைவில் அறிவிப்பு

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!

‛எனக்காடா எண்ட் கார்டு போடுறீங்க... எனக்கு எண்டே இல்லடா...’ வாராரு வாராரு வடிவேலு வாராரு...!