ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக்கின் சகோதரி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக்கின் சகோதரி அஞ்சு சேவாக் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக். அதிரடி ஆட்டக்காரரான இவருக்கு இன்றுவரை ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். டெல்லியை சேர்ந்த இவருக்கு அஞ்சு சேவாக் என்ற சகோதரி இருக்கிறார்.
அஞ்சு சேவாக் ஒரு ஆசிரியர் ஆவார். 2012ஆம் ஆண்டு டெல்லி மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் களம் இறங்கினார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற அவர் தக்ஷின்புரி மாநகராட்சியின் கவுன்சிலராகவும் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் அஞ்சு சேவாக் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்திருக்கிறார். இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மக்கள் நல பணிகளில் ஈர்க்கப்பட்டு அஞ்சு சேவாக் தனது ஆதரவாளர்களுடன் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார்” என குறிப்பிட்டுள்ளது.
Virender Sehwag's sister, Smt Anju Sehwag joins AAP!
— AAP (@AamAadmiParty) December 31, 2021
She is a former Congress councillor from Delhi and was a Teacher by profession.
Inspired by the work done by CM Kejriwal, she has joined AAP with all her supporters! pic.twitter.com/tdgdj7SYQ1
நேற்று கட்சியில் இணைந்த அஞ்சு இதுகுறித்து கூறுகையில், “மாற்றம் என்பது இயற்கையின் விதி. எல்லோருக்குமான தேவையும் அதுவே. ஆம் ஆத்மி சிறப்பாக செயல்பட்டு வருவதால் அக்கட்சியில் இணைந்துள்ளேன். கட்சி எந்த பொறுப்பை கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்வேன்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Katra Kashmir Vaishnavi temple: கூட்டநெரிசல் சிக்கி 12 பேர் பலி: காஷ்மீர் வைஷ்ணோதேவி கோயிலில் நடந்தது என்ன?