Watch Video | ''அடிக்குது குளிரு.. எடுடா போர்வைய.' பெட்ரூமில் மாடுகளை வளர்க்கும் பாசக்கார குடும்பம்..
ஆனால் இங்கே மூன்று மாடுகள் வீட்டுக் குழந்தைகளை போல பாவிக்கப்படுகின்றன

வீடுகளில் நாய், பூனைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பார்கள். அந்த விலங்குகள் வீட்டு பெட்ரூம், ஹால் என அனைத்து இடங்களிலும் ஒய்யாரமாக சுற்றி வரும். சில வீடுகளில் குழந்தைகளைப் போல அந்த செல்லப்பிராணிகள் பாவிக்கப்படுவதையும் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கே மூன்று மாடுகள் வீட்டுக் குழந்தைகளை போல பாவிக்கப்படுகின்றன
அது செய்யும் சேட்டைகளும், செயல்களும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள குடும்பத்தினர் மாடுகளை அவர்கள் வீட்டு செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர். அந்த மாடுகள் பெட்ரூம்களில் ஒரு ஆளாக போர்வையை போர்த்திக்கொண்டு தூங்குவதும், ஜாலியாக வீட்டுக்குள் வலம் வருவதாகவும் உள்ளது. அந்த குடும்பத்தினர் 'cowsblike’ என்ற இன்ஸ்டா பக்கத்தையும் நிர்வகித்து வருகின்றனர். அந்த பக்கத்தில் பதிவிடப்படும் வீடியோக்கள் செம வைரலாகியும் வருகின்றனர். அவர்கள் வீட்டில் கோபி, கங்கா, ப்ரிது என்ற மூன்று மாடுகள் உள்ளன.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram





















