மேலும் அறிய

Sharad Pawar : தேசியவாத காங்கிரஸின் அடுத்த தலைவர் யார்..? கட்சியின் உயர்மட்ட குழு எடுத்த முக்கிய முடிவு...சரத் பவாரின் அடுத்த கட்ட திட்டம் என்ன? 

தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் அறிவித்ததை தொடர்ந்து, கட்சியின் உயர்மட்ட கூட்டம் இன்று நடைபெற்றது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் அறிவித்திருந்த நிலையில், தலைவராக அவரே தொடர வேண்டும் என கட்சியின் உயர் மட்ட குழு முடிவு செய்துள்ளது. ஆனால், ராஜினாமா செய்யும் முடிவை திரும்ப பெறலாமா? வேண்டாமா? என்பதில் சரத் பவார் இறுதி முடிவை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அதிர்ச்சி அளித்த சரத் பவார்:

தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் அறிவித்ததை தொடர்ந்து, கட்சியின் உயர்மட்ட கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவரும் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே, பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், கட்சியின் தலைவராக சரத் பவாரே தொடர வேண்டும் எனக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த தலைவருமான பிரபுல் படேல் தலைமையிலான உயர் மட்ட குழு, பவாரின் முடிவை முற்றிலுமாக நிராகரித்துள்ளது. 

உயர் மட்ட குழு கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரபுல் படேல், "அன்றைய தினம் சரத் பவார் சொன்னது எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அந்த நிகழ்ச்சியில் சரத் பவார் அத்தகைய முடிவை அறிவிப்பார் என்று எங்களுக்குத் தெரியாது.

அவரது அறிவிப்புக்குப் பிறகு என்ன நடந்தது, மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முயன்றதை நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள். கட்சியின் மூத்த தலைவர்கள் பலர், சரத் பவாரை பலமுறை சந்தித்து, கட்சியின் தலைவராக நீங்களே தொடர வேண்டும் என நாடும் மாநிலமும் கட்சியும் விரும்புவதாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சரத் ​​பவார் நாட்டின் சிறந்த மரியாதைக்குரிய தலைவர்" என்றார்.

ஸ்டாலின்  விடுத்த கோரிக்கை:

சரத் பவாரின் முடிவு மகாராஷ்டிரா அரசியலை தாண்டி தேசிய அரசியலிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது. பவாரின் முடிவுக்கு எதிராக கட்சியின் தொண்டர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டர்கள் சிலர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, பவார் தனது முடிவை கைவிட வேண்டும் என திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் இன்று கோரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத் பவார் கைவிட வேண்டும் என ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.

கட்சியின் அடுத்த தலைவராக சுப்ரியா சுலேவையும் கட்சியின் மகாராஷ்டிரா முகமாக அஜித் பவாரையும் நியமிக்க மூத்த தலைவர்கள் ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது. சுப்ரியா சுலேவுக்கும் அஜித் பவாருக்கும் அதிகார போட்டி நிலவி வரும் நிலையில், பிரச்னையை தீர்க்கும் வகையில் இந்த திட்டம் முன்மொழியப்பட்டதாக கட்சி வட்டாரங்களில் தகவல் வெளியானது.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், உத்தவ் தலைமையிலான சிவசேனா கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் அடுத்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

தலைப்பு செய்திகள்

"மோடி நடவடிக்கை எடுப்பார்.. மாணவர்கள் வீட்டுக்கு போங்க.." சல்மான்கான் அட்வைஸ்
நீட் தேர்வு விவகாரம்: டெல்லியில் போராட்டம் தீவிரம்.. தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்? முழு விவரம்!
நீட் தேர்வு விவகாரம்: டெல்லியில் போராட்டம் தீவிரம்.. தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்? முழு விவரம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் கனிமொழி..தமிழ்நாடு நீட் எதிர்ப்பு பற்றி கம்பீரமான பேச்சு
டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் கனிமொழி..தமிழ்நாடு நீட் எதிர்ப்பு பற்றி கம்பீரமான பேச்சு

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
அதிமுகவில் அடுத்த டிக்கெட் காலி.. கட்சியில நடக்குறது பிடிக்கல.. சிங்கை ராமச்சந்திரன் விலகல்!
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
ராஜகம்பீரமா போகனுமா..? Royal Enfield Meteor 350 பைக்கில் போங்க - விலை எவ்ளோ?
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
Brezza Facelift: 6 கியர்கள்.. அசத்தலாக அறிமுகமாகும் மாருதி சுசுகி பிரெஸ்ஸா.. இத்தனை சிறப்புகளா?
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
IND vs ZIM: ஜிம்பாப்வேயிடம் சீறிய இந்தியா! பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! வெற்றிப் பாதையில் கம்பேக்!
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
திறக்கப்பட்டாத அம்பேத்கர் சிலை..7 தலித் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள்..பா ரஞ்சித் காட்டம்
Embed widget