Scrub Typhus : அடுத்த அச்சுறுத்தல்.. 3 நாட்களில் இரண்டாவது மரணம்.. அதிரவைக்கும் ஸ்க்ரப் டைஃபஸ் தொற்று
15 வயது சிறுமி அஸ்வதி இதே நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவிற்காக காத்திருந்த அஸ்வதியின் மரணம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ஸ்க்ரப் டைபஸ்:
கேரளாவில் பரவி வரும் ஸ்க்ரப் டைபஸ் என்னும் நோயால் அடுத்தடுத்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன. ஸ்க்ரப் டைபஸ் நோய் ஓரியன்டியா சுட்சுகாமுஷி' (Orientia tsutsugamushi) எனும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா Chigger mites எனப்படும் ஒரு வகை லார்வா பூச்சிகள் மூலம் பரவுகிறது.
இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்றுநோய் அல்ல.
கேராளவில் அதிகரிக்கும் மரணங்கள்:
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசலில் சபிதா என்னும் 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த 15 நாட்களாக ஸ்க்ரப் டைபஸ் என்னும் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இந்நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் பலனில்லாமல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் உயிரிழந்தார். முன்னதாக வியாழக்கிழமை, திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள வர்கலாவில் 15 வயது சிறுமி அஸ்வதி இதே நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.பத்தாம் வகுப்பு தேர்வு முடிவிற்காக காத்திருந்த அஸ்வதியின் மரணம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கடந்த 3 நாட்களில் நிகழ்ந்த 2 வது மரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி பரவுகிறது ?
கடந்த சில நாட்களாக கேரளாவில் ஸ்க்ரப் டைபஸ் என்னும் நோய் பாதுகாப்பு அதிகரித்துள்ளது. நான் முன்பே கூறியது போல Chigger mites என்னும் ஒரு வகை லார்வா பூச்சால் இந்த நோய் பரவுகிறது. இந்த பூச்சி நேரடியாக மனிதர்களை கடித்தாலோ அல்லது இந்த பூச்சி கடித்த அணில் , எலி போன்ற விலங்குகள் கடித்த பழங்கள் , காய்கறிகளை சாப்பிடுவதாலும் மனிதர்களுக்கு பரவுகிறது.
அறிகுறிகள் :
ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பு ஏற்பட்டால் பூச்சி கடித்த இடத்தில் சிவப்பு சிவப்பாக ஒரு சிறிய தடிப்பு ஏற்படும். பின்னர் தலைவலி , குளிர் காய்ச்சல் போன்ற வழக்கமான இன்ஃபெக்ஷன் அறிகுறிகள் இருக்கும். இதனை ஆரம்பத்தில் அலட்சியப்படுத்தினால் பூச்சி கடித்த இடத்தில் ரத்தக்கட்டு ஏற்ப்பட்டு உறுப்புகள் செயலிழக்க கூடும். அதே போல கோமா, மரணம் உள்ளிட்ட தீவிர பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.
சிகிச்சை :
கேரளாவில்தான் முதன் முறையாக இந்த நோய் தாக்குகிறது என்பதல்ல . 1930-ஆம் ஆண்டில் முதலில் ஜப்பானில் இந்த நோய் பரவியது . இந்தியாவில் ஜம்மு கஷ்மீர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட இடங்களிலும் கடந்த 2004 ஆம் ஆண்டில் நோய் தாக்கம் ஏற்ப்பட்டது. இந்த நோய்க்கு தடுப்பூசியோ அல்லது பிரத்யேக மருந்துகளோ கிடையாது. ஆரம்பக்கட்ட அறிகுறிகளை தடுக்க oxycycline அல்லது tetracycline மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன