ஆர்.எஸ்.எஸ் சமூகத்தை ஒழுங்கமைக்குது.. சாமானியர்கள் தெருவில் இறங்கியதால்தான் சுதந்திரம் கிடைத்தது - மோகன் பகவத்
Mohan Bhagwat : " சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டால் அனைத்து விஷயங்களிலும் மாற்றம் ஏற்படும். ஆர்எஸ்எஸ் அந்த சமூகத்தை ஒழுங்கமைக்கிறது" என்றார் பகவத்.
Mohan Bhagwat: மக்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்... ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பகவத் மராத்தி இலக்கிய அமைப்பான விதர்பா சாகித்ய சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட பொது சில கருத்துக்களை முன் வைத்தார்.
பகவத்தின் கருத்து:
ஒரு தலைவரால் மட்டுமே இந்த நாட்டில் உள்ள அனைத்து சவால்களையும் சமாளிக்க முடியாது. இது சங்க சித்தாந்தத்தின் அடிப்படை சிந்தனையில் உள்ளது. மேலும் சாமானியர்கள் எப்போது தெருவில் இறங்கி போராட ஆரம்பித்தார்களோ அப்போது தான் நம் நாடு சுதந்திரம் பெற்றது என்றார்.
ஒரு தலைவரால் மட்டுமே இந்த நாட்டில் உள்ள அனைத்து சவால்களையும் சமாளிக்க முடியாது. ஒரு அமைப்போ அல்லது கட்சியோ இந்த மாற்றத்தை கொண்டு வர முடியாது என்கிறார் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத். அது யாராக இருந்தலும் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் ஒரு தலைவரால் சமாளிக்க இயலாது என்றார்.
சுதந்திர போராட்டத்தில் புரட்சியாளர்களின் பங்களிப்பு:
இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டம் தொடங்கியது 1857ம் ஆண்டு ஆனால் அந்த போராட்டம் ஒரு பெரிய அளவிலான விழிப்புணர்விற்கு பிறகு தான் வெற்றி பெற்றது. அந்த விழிப்புணர்வின் பலனாக சாதாரண மக்கள் அனைவரும் தெருவில் இறங்கி போராட துவங்கினர். புரட்சியாளர்களும் சுதந்திர போராட்டத்திற்காக பெரிதும் பாடுபட்டனர். அவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. சுபாஷ் சந்திரபோஸ் ஆங்கிலேயர்களுக்கு முன் பெரிய சவால்களை விடுத்தார். அது மக்களுக்கு தைரியத்தை கொடுத்தது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் சிறைக்கு செலவில்லை. ஒரு சிலர் ஒதுங்கி கொண்டாலும் நமது நாடு சுதந்திரம் பெற வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் பரவலாக இருந்தது.
சமூகம் திறம்பட வேண்டும் :
இந்து சமுதாயம் அவர்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அவர்களின் பொறுப்புகளை நிறைவேற்றும் திறன் கொண்டவர்களாக மாற வேண்டும் என்பது தான் ஆர்எஸ்எஸ் கட்சியின் விருப்பம். தலைவர்கள் சமூகத்தை உருவாகவில்லை, சமூகம் தான் தலைவர்களை உருவாக்குகிறது என்றார். " சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டால் அனைத்து விஷயங்களிலும் மாற்றம் ஏற்படும். ஆர்எஸ்எஸ் அந்த சமூகத்தை ஒழுங்கமைக்கிறது" என்றார் பகவத்.
நமது நாட்டின் நிலைமையை மேம்படுத்துவதை மற்றவர்களிடம் வழங்காமல் அதன் பொறுப்பை மக்கள் ஏற்று கொள்ள வேண்டும். இந்த பொறுப்பை சங்கதிரடிடம் கூட கொடுக்க வேண்டாம். அவரவரின் வேலையை அவரவர்களே செய்யுங்கள். மக்கள் இதை கற்று கொள்ள வேண்டும்" என்றார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத்.