RS 2000 Notes: 2019ம் ஆண்டே 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம் - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்
2018ம் ஆண்டு முதல் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்திவிட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பணமதிப்பு கொண்ட தாளாக இருப்பது ரூபாய் 2000. இந்த நிலையில், 2000 ரூபாய் தாள்கள் புழக்கம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், ரூபாய் 2000 நோட்டு அச்சிடுவதை 2019ம் ஆண்டே நிறுத்திவிட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
2016ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி அப்போது புழக்கத்தில் இருந்த ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன.
இந்நிலையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணியை 2019 ஆம் ஆண்டிலியே நிறுத்திவிட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களே போதுமானது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சிடும் திட்டம் எதுவும் இல்லை எனவும் மாநிலங்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பதில் அளித்துள்ளார்.
இதையும் படிக்க: Gold, Silver Price : அதிர்ந்த மக்கள்.. ரூ.43 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ