Mallikarjun Kharge On Modi: உங்க பாவத்துக்கு காங்கிரஸ் மீது பழியா? - பிரதமர் மோடிக்கு கார்கேவின் 3 கேள்விகள்..
kharge On Modi: காங்கிரஸை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடிக்கு, அக்கட்சியின் தலைவர் கார்கே 3 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
kharge On Modi: ஜனநாயகத்தை வைத்து சூழ்ச்சி செய்வதிலும், அரசியலமைப்பை புண்படுத்தும் கலையிலும் நீங்கள் தேர்ச்சி பெற்றவர் என, பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் கார்கே சாடியுள்ளார்.
பிரதமர் மோடியை கடுமையாக சாடிய கார்கே:
நீதித்துறைக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக 600 வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு கடிதம் எழுதியிருந்தனர். அதுதொடர்பாக காங்கிரஸை பிரதமர் கடுமையாக சாடியிருந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் கார்கே, பிரதமர் மோடிக்கு சில கேள்விகளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில்,
“பிரதமர் மோடி அவர்களே நீங்கள் நீதித்துறை பற்றி பேசுகிறீர்கள்.
1. 4 மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முனன்னெப்போதும் இல்லாத வகையில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி "ஜனநாயகத்தின் அழிவுக்கு" எதிராக எச்சரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பதை நீங்கள் வசதியாக மறந்துவிட்டீர்கள். இது உங்கள் ஆட்சியில் நடந்தது. அந்த நீதிபதிகளில் ஒருவர் உங்கள் அரசால் ராஜ்யசபாவிற்கு நியமிக்கப்பட்டார். எனவே 'தீர்மானிக்கப்பட்ட நீதித்துறையை' விரும்புவது யார்?
2. தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கு உங்கள் கட்சி மேற்கு வங்கத்தில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியை நிறுத்தியதை மறந்துவிட்டீர்கள் . அவருக்கு ஏன் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது?
3. தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை (NJAC) கொண்டு வந்தவர் யார் ? ஏன் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தால் அது முடக்கப்பட்டது?
மோடி அவர்களே, ஒவ்வொரு அமைப்பும் உங்களால் 'கொடுமைப்படுத்தப்படுகிறது'. எனவே உங்கள் சொந்த பாவங்களுக்காக காங்கிரஸ் கட்சியின் மீது பழி சுமத்துவதை நிறுத்துங்கள். ஜனநாயகத்தை வைத்து சூழ்ச்சி செய்வதிலும், அரசியலமைப்பை புண்படுத்தும் கலையிலும் நீங்கள் தேர்ச்சி பெற்றவர்” என கார்கே சாடியுள்ளார்.
PM @narendramodi ji,
— Mallikarjun Kharge (@kharge) March 28, 2024
You are talking about Judiciary.
1. You conveniently forget that 4 senior-most Supreme Court judges were forced to hold an unprecedented press conference and warn against "destruction of Democracy". That happened under your regime.
One of the judges was…
பிரதமரின் விமர்சனம் என்ன?
வழக்கறிஞர்கள் எழுதிய கடித்தை குறிப்பிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட்டு இருந்த டிவிட்டர் பதிவில், ”மற்றவர்களைத் துன்புறுத்துவதும் கொடுமைப்படுத்துவதும் பழங்கால காங்கிரஸ் கலாச்சாரம். ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர், அவர்களே 'தீர்மானிக்கப்பட்ட நீதித்துறை'க்கு அழைப்பு விடுத்தனர். அவர்கள் வெட்கமின்றி தங்கள் சுயநலத்திற்காக மற்றவர்களிடமிருந்து அர்ப்பணிப்பை விரும்புகிறார்கள். ஆனால் தேசத்திற்கான அர்ப்பணிப்பிலிருந்து ஒதுங்குகிறார்கள்” என சாடியிருந்தார். இந்நிலையில் தான் அவருக்கு பதலடி தரும் வகையில் காங்கிரஸ் தலைவர் கார்கே சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.