மேலும் அறிய

"முட்டாள்த்தனமா பேசாதீங்க.. இந்துக்களுக்கு அடி விழுது" பாஜகவை வறுத்தெடுத்த பிரியங்கா!

பாலஸ்தீன கொடி பொறித்த பையுடன் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்திற்கு வந்தது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு பாலஸ்தீன கொடி பொறித்த பையுடன் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வந்தது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை முன்வைத்து பாஜக கடும் விமர்சனங்களை மேற்கொண்டு வருகிறது. இதற்கு, வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து அந்நாட்டு அரசிடம் பேசாமல் முட்டாள்த்தனமா பேசுவதாக பிரியங்கா காந்தி பதிலடி அளித்துள்ளார். 

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர், உலக மக்களின் மனசாட்சியை உலுக்கி வருகிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே, கடந்த 2023ஆம் ஆண்டு, அக்டோபர் 7ஆம் தேதி, மோதல் தொடங்கியது.

"முட்டாள்த்தனமா பேசாதீங்க"

தாக்குதலை ஹமாஸ் தொடங்கியிருந்தாலும், அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் நடத்தி வரும் போர், அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவியுள்ளது.

இஸ்ரேலுடன் இணக்கமாக செயல்பட்டு வரும் அதே நேரத்தில், பாலஸ்தீனியர்களுக்கு பல்வேறு வகையில் இந்தியா உதவி வருகிறது. இந்த விவகாரத்தில் இஸ்ரேல் மீது காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடருக்கு பாலஸ்தீன கொடி பொறித்த பையுடன் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வந்தது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதை வைத்து பாஜக கடும் விமர்சனங்களை மேற்கொண்டு வருகிறது.

பாஜகவை வறுத்தெடுத்த பிரியங்கா காந்தி:

இதுகுறித்து பாஜகவின் தேசிய ஐடி பிரிவு பொறுப்பாளர் அமித் மால்வியா கூறுகையில், "நாடாளுமன்றத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி அதன் சின்னம் பொறித்த பையை கொண்டு வருவது ராகுல் காந்தியை விட அவர் ஒரு பெரிய பேரழிவு என்பதை உணர்த்துகிறது.

அது சரிதான். மதவெறியுடன் செயல்பட்டுவிட்டு முஸ்லீம்களுக்கு சிக்னல் கொடுப்பது இப்போது ஆணாதிக்கத்திற்கு எதிரான நிலைப்பாடாக மறைக்கப்பட்டுள்ளது" என விமர்சித்துள்ளார். இதற்கு பதிலடி அளித்துள்ள பிரியங்கா காந்தி, "வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளைப் பற்றி ஏதாவது செய்யச் சொல்லுங்கள். வங்கதேச அரசாங்கத்துடன் பேசுங்கள். முட்டாள்தனமான விஷயங்களைச் சொல்லாதீர்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Vijay Sethupathi :
Vijay Sethupathi : "இது என் படத்தோட ப்ரோமோஷன்..அத பத்தி ஏன் பேசனும்?" சூடான விஜய் சேதுபதி
Embed widget