கடற்கரையில் செல்லப் பிராணியுடன் எஞ்ஜாய் பண்ணும் பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனாஸும்..
பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் கலிபோர்னியா கடற்கரையில் தங்கள்து செல்லப்பிறாணியான நாயுடன் ஒன்றாக நடை பயணம் செய்ததை ரசிகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர், பாடகர் நிக் ஜோனாஸ் ஆகியோர் சமீபத்தில் கலிபோர்னியா கடற்கரையில் தங்கள் செல்லப் பிராணியான நாயுடன் நடைப் பயணம் மேற்கொண்டனர். சமுக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அவர்களது ரசிகர் ஒருவர் அதனை புகைப்படம் எடுத்து வெளி இட்டார். இந்த புகைப்படததில் ஜோடியாக இருவரும் கைக் கோர்த்து பொழுதைக் கழிக்கும் காட்சியை கண்டு ரசித்து வருகின்றனர்.
View this post on Instagram
2000ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா, 2002 இல் தமிழில் விஜய் நடித்த 'தமிழன்' திரைப்படம் மூலம் கதா நாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து பல இந்திப் படங்கள் மூலம் பாலிவுட்டின் முன்னணி நடிகையானார். பாலிவுட் திரையுலகில் தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்துள்ள அவர், ஹாலிவுட் பட உலகில் நுழையும் முன்பாக, குவான்டிகோ என்ற அமெரிக்க டி.வி தொடரில் நடித்து உலக அளவில் பிரபலமானார். பே வாட்ச், எ கிட் லைக் ஜேக் போன்ற படங்கள் மூலம் ஹாலிவுட்டிலும் கால் பதித்து வெற்றிகரமாக வலம் வருகிறார்.
இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு, தன்னை விட சுமார் 10 வயது இளையவரான ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனாசை காதல் திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா சோப்ரா. திருமணம் முடிந்த மூன்று மாதங்களிலேயே, இருவருக்கும் கருத்து வேறுபாடு என்றும் விவாகரத்துக்கு தயாராகி வருகிறார்கள் என்றும் வதந்திகள் பரவின. அதற்கு தனது செய்தித் தொடர்பாளர் மூலம் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று விளக்கம் அளித்தார் பிரியங்கா சோப்ரா. ஆனால் மீண்டும் நிக் ஜோனாசை அவர் விவாகரத்து செய்ய தயாராகி வருவதாக வதந்தி பரவியது. இதையடுத்தே இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதன்மூலம் வதந்திக்கு இருவரும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது.