பிரதமர் மோடிக்கு மீண்டும் கோவாக்சின் தடுப்பூசி
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடிக்கு கோவாக்சின் தடுப்பூசியின் 2வது டோஸ் இன்று காலை செலுத்தப்பட்டது.
நாடு முழுவதும் கடந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இந்தியாவில் தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக கொரோனா முன்கள தடுப்பு பணியாளர்கள், பாதுகாப்பு வீரர்கள், மூத்த குடிமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி பிரதமர் மோடி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா வைரசுக்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இந்த கோவாக்சின் இரண்டு கட்டங்களாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

Delhi: Prime Minister Narendra Modi takes his second dose of #COVID19 vaccine at AIIMS

He received the first dose of Bharat Biotech's COVAXIN on March 1 pic.twitter.com/8Skoware1Z
— ANI (@ANI) April 8, 2021

இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று கோவாக்சின் தடுப்பூசியின் 2வது டோசை,டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செலுத்திக்கொண்டார். அவருக்கு புதுச்சேரியைச் சேர்ந்த நிவேதா மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த நிஷா என்ற இரு செவிலியர்கள் தடுப்பூசியை செலுத்தினர்.