PM Modi: வீட்டிலிருந்து வேலை.. பெண்களுக்கான வேலை நேரம்.. பிரதமர் மோடி பேசியது என்ன?
பணியாளர்களுக்கான உகந்த சூழ்நிலையை உருவாக்க மத்திய அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வீட்டிலிருந்து வேலை செய்யும் சூழல் மற்றும் பெண்களுக்கு உகந்த பணி நிலைமைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 2047 ஆம் ஆண்டிற்கான தொலைநோக்கு பார்வையை உருவாக்க மத்திய தொழிலாளர் அமைச்சகம் செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
தொழிலாளர் உச்சி மாநாடு:
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால், ஆகஸ்ட் 25-26 தேதிகளில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் திருப்பதியில் இரண்டு நாள் தொழிலாளர் உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, "கடந்த 8 ஆண்டுகளில், நாங்கள் தொழிலாளர் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளோம், ஏகாதிபத்திய மற்றும் பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டங்களை அகற்றியுள்ளோம். இந்த சீர்திருத்தங்கள் மூலம், தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம், சுகாதார காப்பீடு மற்றும் பிற சலுகைகளை நாங்கள் உறுதி செய்துள்ளோம். அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டம், கோவிட் தொற்றுநோய்களின் போது 1.5 கோடி மக்களைப் பாதுகாத்தது என தெரிவித்தார்.
Addressing the National Labour Conference of Labour Ministers of all States and Union Territories. https://t.co/AdoAlnJFrl
— Narendra Modi (@narendramodi) August 25, 2022
மேலும், 2047 ஆம் ஆண்டிற்கான தொலைநோக்கு பார்வையை உருவாக்க மத்திய தொழிலாளர் அமைச்சகம் செயல்பட்டு வருவதாகவும் கூறினார். தேசிய தொழிலாளர் மாநாட்டில் எடுக்கப்பட்ட விவாதங்கள் மற்றும் முடிவுகள் நாட்டின் தொழிலாளர்களுக்கு அதிகாரமளிக்கும் என்று கூறிய பிரதமர் மோடி, அமைப்புசாரா துறைகளில் பணிபுரிபவர்களின் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்கள், இந்தியாவில் தொழிலாளர் சக்தியை வலுப்படுத்த உதவும் என்றும் கூறினார்.
Labour force has huge role in realising dream of developed India: PM Modi
— ANI Digital (@ani_digital) August 25, 2022
Read @ANI Story | https://t.co/wSna3BVRfT#PMModi #NationalLabourConference pic.twitter.com/k4EDQeZBO5
கூட்டுறவு கூட்டாட்சி:
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால், இரண்டு நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ல இம்மாநாட்ட்டில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்கள் பங்கேற்றனர். இம்மாநாடானது கூட்டுறவு கூட்டாட்சியை வலுப்படுத்தும் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. பணியாளர்களுக்கான சிறந்த கொள்கைகளை வகுப்பதிலும், தொழிலாளர்களின் நலனுக்காக திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதிலும் மத்திய மற்றும் மாநில அரசுகளிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் இம்மாநாடு உதவும் எனவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Also Read: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குறுகிய தொலைவு ஏவுகணை.. வெற்றிகரமாக சோதனை செய்த டிஆர்டிஓ!தரையிலிருந்து விண்ணில் ஏவப்படும் குறுகிய தொலைவு ஏவுகணையை டிஆர்டிஓ மற்றும் இந்திய கடற்படை வெற்றிகரமாக ஏவி சோதனை நடத்தியுள்ளது." target="">ஓ!தரையிலிருந்து விண்ணில் ஏவப்படும் குறுகிய தொலைவு ஏவுகணையை டிஆர்டிஓ மற்றும் இந்திய கடற்படை வெற்றிகரமாக ஏவி சோதனை நடத்தியுள்ளது.