உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குறுகிய தொலைவு ஏவுகணை.. வெற்றிகரமாக சோதனை செய்த டிஆர்டிஓ!
தரையிலிருந்து விண்ணில் ஏவப்படும் குறுகிய தொலைவு ஏவுகணையை டிஆர்டிஓ மற்றும் இந்திய கடற்படை வெற்றிகரமாக ஏவி சோதனை நடத்தியுள்ளது.
தரையிலிருந்து விண்ணில் ஏவப்படும் குறுகிய தொலைவு ஏவுகணையை டிஆர்டிஓ மற்றும் இந்திய கடற்படை வெற்றிகரமாக ஏவி சோதனை நடத்தியுள்ளது.
இந்திய கடற்படை கப்பலில் இருந்து ஏவப்பட்ட குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை நேற்று வெற்றி பெற்றது. ஒடிசா கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றிபெற்றதாக ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தகவல் தெரிவித்தது.
#DRDOUpadtes | Vertical Launch Short Range Surface-to-Air Missile successfully flight tested off Odisha coast. The missiles equipped with indigenous RF seeker intercepted the target with high accuracy.@DefenceMinIndia @SpokespersonMoD@indiannavy https://t.co/vnBgd1xmwm
— DRDO (@DRDO_India) August 23, 2022
இந்த ஏவுகணை செங்குத்தாக ஏவப்பட்டு குறுகிய தொலைவு இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது எனவும், ஆளில்லா விமானங்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் புதிய ஏவுகணை உருவாக்கப்பட்டது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த ஏவுகணை உள்நாட்டிலேயே டி.ஆர்.டி.ஓ-வால் வடிவமைத்து உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
குறுகிய தொலைவு ஏவுகணை :
ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) மற்றும் இந்திய கடற்படை ஒடிஷா மாநிலம் சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை ஏவுதளத்திலிருந்து குறுகிய தொலைவு சென்று தாக்கும் ஏவுகணையை நேற்று (23.08.2022) வெற்றிகரமாக ஏவி சோதனை செய்தது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரேடியோ அதிர்வெண் உபகரணம் பொருத்தப்பட்ட ஏவுகணைகள் இலக்கை இடைமறித்து துல்லியமாக தாக்கியது. இந்த ஏவுகணை உள்நாட்டிலேயே டிஆர்டிஓ-வால் வடிவமைத்து உருவாக்கப்பட்டது.
#DRDO and @IndianNavy successfully flight tested Vertical Launch Short Range Surface-to-Air Missile (VL-SRSAM) from the ITR, Chandipur off the coast of Odisha on August 23,2022.
— Defence Decode® (@DefenceDecode) August 23, 2022
The flight test was carried out from an Indian Naval Ship against a high-speed unmanned aerial target pic.twitter.com/jkNzkw4cl5
2/2
— Vayu Aerospace Review (@ReviewVayu) August 23, 2022
The missile, equipped with indigenous Radio Frequency (RF) seeker, intercepted the target with high accuracy. The VL-SRSAM system has been indigenously designed and developed by India's DRDO. pic.twitter.com/TSdFuf6taf
இந்த வெற்றிகரமான சோதனையை அடுத்து பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், டிஆர்டிஓ, இந்திய கடற்படை மற்றும் தொடர்புடைய குழுவினரை பாராட்டினார். இந்த ஏவுகணை இந்திய கடற்படையின் வலிமையை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இதேபோல டிஆர்டிஓ தலைவரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலரும் வெற்றிகரமான சோதனையை நிகழ்த்திய குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.