மேலும் அறிய

PM - CARES அரசு நிதி இல்லையா? நிர்வகிப்பது யார்? எழும் கேள்விகள் என்ன?

நீங்கள், https://www.pmcares.gov.in/en/ என்ற இணையதளத்திற்குச் சென்றால் பிரதமர் மோடியின் புகைப்படம் அருகே ஒரு தகவல் இடம்பெற்றிருக்கும்.

PM- CARES நிதி கொரோனாவுக்கான போராட்டத்தை வலுப்படுத்தும் இலக்கைக் கொண்டது. கொரோனா வைரஸை வீழ்த்த ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும், தரமான சிகிச்சை கிடைப்பதை விஸ்தரிக்கவும் இந்த நிதி பயன்படும். அனைத்துத் தரப்பு மக்களும் PM- CARES-க்கு நண்கொடை அளிக்க நான் வேண்டுகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிகழ்கால சவாலை எதிர்கொள்வோம். எதிர்காலத்தைப் பாதுகாப்போம்.

நீங்கள், https://www.pmcares.gov.in/en/ என்ற இணையதளத்திற்குச் சென்றால் பிரதமர் மோடியின் புகைப்படம் அருகே மேற்கூறிய தகவல் இடம்பெற்றிருக்கும்.

இப்போது பிரச்சனை இதுவல்ல? PM- CARES நிதி அரசு நிதியல்ல என்று பிரதமரின் அலுவலகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதுதான் பிரச்சனை. பிஎம் கேர்ஸ் நிதியம் குறித்து வழக்கில் கடந்த வாரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவில், பிஎம் கேர்ஸ் மத்திய அரசுக்கு சொந்தமானது அல்ல எனத் தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்வி்களை எழுப்பி வருகின்றன. அரசு ஊழியர்கள் PM- CARES நிதிக்கு தாராளமாக நிதியளிக்க ஊக்குவிக்கப்பட்டனர், அரசாங்க இணையதளம் வாயிலாக PM- CARES-க்கு விளம்பரம் மூலம் நிதி திரட்டப்படுகிறது. தவிர எல்லா அரசு இணையதளங்களிலும் PM- CARES பக்கத்திற்குச் செல்ல இணைப்பு இருக்கிறது. கடந்த 2020-ஆம் ஆண்டில் அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை PM- CARES நிதிக்கு அளிக்கச் செய்யப்பட்டனர்.

இத்தனை நடந்தபின்னரும் வெளிப்படைத்தன்மை இல்லையே என்பதுதான் எதிர்க்கட்சிகளின் ஆதங்கமாக உள்ளது.

PM- CARES உருவான கதை:

கடந்த 2019 டிசம்பர் மாதம் சீனாவின் வூஹானில் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். அதன் பின்னர் இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி ஜனவரியில் கண்டறியப்பட்டார். மார்ச் மாதம் தேசம் முதல் முழு ஊரங்கை சந்தித்தது. அந்தச் சூழலில் தான் பிரதமர் அவசரகால நிலைமைகளுகாக குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதி (Prime Minister Citizens Assistance and Relief Emergency Situations Fund -PM CARES) என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இதன் கவுரவத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும், அறங்காவலர்களாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளனர்.

கொரோனா என்ற புதிய பெருந்தொற்று ஏற்படுத்தியிருந்த அச்சம் பொதுமக்களையும், தொழிலதிபர்களையும், பிரபலங்களையும் தாராளமாக நிதியுதவி செய்யத் தூண்டியது. இதனால், தொடங்கப்பட்ட ஒரே வாரத்தில் ரூ.6500 கோடி நிதி வசூலானது. இதில் ரத்தன் டாடா மட்டுமே ரூ.1500 கோடி நிதி வழங்கினார்.

இயற்கைப் பேரிடர்களை சமாளிக்க, ஏற்கெனவே பிரதமரின் தேசிய நிவாரண நிதி என்ற ஒன்று நீண்டகாலமாக இருக்கிறது. இந்தச் சூழலில் ஏன் PM- CARES என்று தனியாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது. ஒரே வாரத்தில் ரூ.6500 கோடி நிதி குவிய சிலர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் PM- CARES செயல்பாடுகள் குறித்து தகவல் கோரினர். ஆனால், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் PM- CARES வராது என்று அதிர்ச்சித் தகவலை அரசு தெரிவித்தது. இதுதான் சர்ச்சையின் ஆரம்பப் புள்ளி. PM- CARES பொது அமைப்பு கிடையாது. கேக் எனப்படும் மத்திய அரசின் தணிக்கை அமைப்பின் அதிகார வரம்பின் கீழ் இது வராது. இது ஒரு தொண்டு அமைப்பு என்று தெரிவிக்கப்பட்டது. இந்தக் குழப்பங்கள் காரணமாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் சம்யக் அகர்வால் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர், PM- CARES நிதியின் குழப்பங்களை அரசு களைய வேண்டும் என்று கோரியிருந்தார்.

PM- CARES அரசு அமைப்பு இல்லை என்றால் பிரதமர் படத்தை பயன்படுத்தக்கூடாது, அரசு லோகோவையும் பயன்படுத்தக்கூடாது. நண்கொடை அளிப்பவர்களின் விவரங்களை, தொகையை அவ்வப்போது வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றெல்லாம் கோரினார். இதேபோல் இன்னொருவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் PM- CARESஐ அரசாங்க அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த வழக்குகள் எல்லாம் விசாரணைக்கு வர, எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சனங்களை முன்வைக்க பிரதமர் அலுவலகம் தரப்பில் PM- CARES ஒரு தொண்டு நிறுவன அறக்கட்டளை போன்றது. இதில் பிரதமர் அலுவலகம் கவுரவ அடிப்படையில்தான் அங்கம் வகிக்கிறது என்று தெரிவித்தது. PM- CARES இணையதளத்திலேயே தணிக்கை அறிக்கைகள் இருக்கின்றன. PM- CARES நிதி அறக்கட்டளை அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு உருவாக்கப்படவில்லை. இது தனிநபர்களிடமிருந்து பெறப்படும் நிதியால் செயல்படுவதால் கேக் இதில் தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளது.

எதிர்கொள்ளப்படும் கேள்விகள்

 இது குறித்து எழுப்பப்படும் கேள்விகள்., 
1. அறக்கட்டளையின் செயல்பாடுகள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லையென்றால் ஏன் பிரதமரின் படம் இணையதளத்தில் இடம்பெற வேண்டும்?
2. இந்த அதிகாரப்பூர்வ பிஆர்ஓவாக எதற்காக பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் நியமிக்கப்பட வேண்டும்?
3. எதற்காக நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் ஒருநாள் ஊதியத்தை அளிக்க நிர்பந்திக்கப்பட வேண்டும்?
என்று அடுக்கடுக்காக கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் விரைவில் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கின்றன. இந்தச் சூழலில் PM- CARES சர்ச்சை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் துருப்புச் சீட்டாக அமையும் என்பதில் ஐயமில்லை.

பிரதமர் பதிலளிப்பாரா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
WPL Auction 2025: யார் இந்த கமாலினி? 16 வயதில், ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன மதுரை ஆல்-ரவுண்டர் - மகளிர் பிரீமியர் லீகில் அசத்தல்
WPL Auction 2025: யார் இந்த கமாலினி? 16 வயதில், ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன மதுரை ஆல்-ரவுண்டர் - மகளிர் பிரீமியர் லீகில் அசத்தல்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
WPL Auction 2025: யார் இந்த கமாலினி? 16 வயதில், ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன மதுரை ஆல்-ரவுண்டர் - மகளிர் பிரீமியர் லீகில் அசத்தல்
WPL Auction 2025: யார் இந்த கமாலினி? 16 வயதில், ரூ.1.60 கோடிக்கு ஏலம்போன மதுரை ஆல்-ரவுண்டர் - மகளிர் பிரீமியர் லீகில் அசத்தல்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
பிரபல தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி
Breaking News LIVE: தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Thiruppavai Paadal 1:
Thiruppavai Paadal 1: "கண்ணனை பார்த்து..பார்த்து, தாயின் கண்களே அழகாகிவிட்டது" போற்றி பாடும் ஆண்டாள்!
Bumrah: கதறிய கங்காரு பாய்ஸ்! பும்ரா எனும் புயல் படைத்த புது சாதனை - காலையிலே ஹாப்பி
Bumrah: கதறிய கங்காரு பாய்ஸ்! பும்ரா எனும் புயல் படைத்த புது சாதனை - காலையிலே ஹாப்பி
Embed widget