Pahalgam Attack: ஈவுஇரக்கமின்றி தாக்குதல்! அப்பாவிகளை கொன்ற மிருகங்களின் படம் வெளியீடு
Pahalgam Terror Attack: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சந்தேகப்படும் நபர்களான ஆசிப் ஃபௌஜி, சுலேமான் ஷா மற்றும் அபு தல்ஹா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய சந்தேக நபர்களின் வரைபடங்களை பாதுகாப்புத்துறை வெளியிட்டன. பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையில் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
நாடு திரும்பிய பிரதமர்:
இந்த தாக்குதல் , பஹல்காம் அருகே உள்ள பிரபலமான சுற்றுலா தலமான பைசரன் புல்வெளியில் நடந்தது, இது 'மினி சுவிட்சர்லாந்து' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தாக்குதல் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி அரேபியா பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லிக்குத் திரும்பினார், அதே நேரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை காஷ்மீருக்கு விரைந்தார், தாக்குதல் தொடர்பாக அவசர உயர்மட்ட நகர்வுகளையும் திட்டங்களில் மாற்றத்தையும் ஏற்படுத்தியது.
படங்கள் வெளியீடு:
இந்த தாக்குதல் தொடர்பாக சந்தேகப்படும் நபர்களான ஆசிப் ஃபௌஜி, சுலேமான் ஷா மற்றும் அபு தல்ஹா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மூசா, யூனுஸ் மற்றும் ஆசிப் என்ற குறியீட்டுப் பெயர்களையும் கொண்டிருந்தனர் என்றும், பூஞ்சில் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். உயிர் பிழைத்தவர்களின் உதவியுடன் இந்த படங்கள் தயாரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் ஜம்முவின் கிஷ்த்வாரில் இருந்து கடந்து தெற்கு காஷ்மீரில் உள்ள கோகர்நாக் வழியாக பைசரனை அடைந்து பள்ளத்தாக்கில் பொதுமக்களை குறிவைத்து சமீபத்திய ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிகக் கொடிய தாக்குதல்களில் ஒன்றை நடத்தியிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
டிரம்ப் கண்டனம்:
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளதாக தெரிகிறது. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதியின் சமீபத்திய 'ஆத்திரமூட்டும்' அறிக்கையே காரணம் என்று நாட்டில் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உலகம் முழுவதிலுமிருந்து இரங்கல்களும் எதிர்வினைகளும் குவிந்தன , அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் "முழு ஆதரவையும்" இந்தியாவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் உறுதியளித்தார்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளின் உயிர் இழப்பு குறித்து பாகிஸ்தான் கவலை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் இரங்கல்:
தாக்குதல் தொடர்பான ஊடக கேள்விகளுக்கு ர் ஷஃப்கத் கான் ஒரு அறிக்கையில் கூறியதாவது: “ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளின் உயிர்கள் இழந்ததில் நாங்கள் கவலை கொண்டுள்ளோம்.
"இறந்தவர்களின் உறவினர்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்" என்று பாகிஸ்தான் தரப்பில் இருந்து தங்களது அனுதாபங்களை தெரிவித்துள்ளது.
காஷ்மீர் விரைந்த அமித் ஷா
பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தனது சவுதி அரேபியா பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பினார், அதே நேரத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து தகவல் கிடைத்த சிறிது நேரத்திலேயே உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீருக்கு விரைந்தார்.
டெல்லியில் தரையிறங்கியவுடன் பிரதமர் மோடி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் மற்றும் பலருடன் ஒரு சந்திப்பை நடத்தினார். உள்துறை அமைச்சர் அமித் ஷா பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிட்டார்.

