Watch video: பறவையை காப்பாற்ற சென்று உயிரைவிட்ட பரிதாபம்...நடுரோட்டில் நடந்த சம்பவம்...அதிர்ச்சி வீடியோ
இந்த விபத்து மே 30-ஆம் தேதி நிகழ்ந்ததாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
பணத்திற்காக ஒவ்வோருவரும் ஓடிக் கொண்டிருக்கும் சமயத்திலும், அன்பு ஒன்றுதான் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பாலமாக உள்ளது. மனிதர்களை தாண்டி விலங்குகள் மீது காட்டப்படும் மனிதநேயம் தான் உலகை தொடர்ந்து இயக்கிவருகிறது. அந்த வகையில், மும்பையில் நடைபெற்ற ஒரு சம்பவம் நம் மனதையே உலுக்கியுள்ளது.
மும்பை பாந்த்ரா-வொர்லி பகுதியில் காரை ஓட்டி கொண்டு சென்றபோது நடுரோட்டில் அடிபட்டு கிடந்த பறவையை காப்பாற்ற சென்ற 43 வயது மதிக்கதக்க தொழிலதிபர், அவரது ஓட்டுநர் மீது கார் மோதியதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுபற்றிய சிசிடிவி காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
This is shocking... #bandraworlisealink.#Mumbai.@RoadsOfMumbai @mumbaitraffic pic.twitter.com/wKX41GOTQM
— Vivek Gupta (@imvivekgupta) June 10, 2022
நெப்பன்சி பகுதியை சேர்ந்த தொழிலதிபர் அமர் மணிஷ் ஜரிவாலா, மாலாத் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும் அப்போது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விரிவாக பேசிய பாந்த்ரா காவல் நிலைய அலுவலர், "பாந்த்ரா வோர்லி கடல் இணைப்பில் செல்லும் வழியில், ஒரு பறவை அவர்களின் கார் மீது மோதியது, அதைத் தொடர்ந்து காயமடைந்த பறவையைக் காப்பாற்ற ஜரிவாலா கீழே இறங்கினார்.
அப்போது வேகமாக வந்த டாக்ஸி ஜாரிவாலா மற்றும் அவரது டிரைவர் ஷியாம் சுந்தர் காமத் மீது மோதியது. அருகில் உள்ள மருத்துவமனையின் மருத்துவர்கள் வந்தவுடன் ஜரிவாலாவை சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, அவரும் உயிரிழந்தார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை : கீழடி அருங்காட்சியக பணிகள் மே 31-க்குள் நிறைவுபெறும் - அமைச்சர் எ.வ வேலு
வேகமாகவும் கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டியதற்காக டாக்சி ஓட்டுநர் ரவீந்திர குமார் ஜெய்ஸ்வர் (30) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்