Gas Cylinder : மக்களே.. இதைப்படிங்க முதல்ல.. இனி ஆண்டுக்கு 15, மாசத்துக்கு இத்தனை சமையல் சிலிண்டர்தான்..
ஒரு வாடிக்கையாளருக்கு 14.2 கிலோ சிலிண்டரை ஆண்டுக்கு 15 ஆகவும், அதிகபட்சமாக மாதம் 2 முறை மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வீட்டு உபயோகத்திற்காக வழங்கப்படும் சமையல் கேஸ் சிலிண்டர்கள் (14.2 கிலோ) சட்டவிரோதமாக வணிக நோக்கத்திற்காக கடைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் பல நாட்களாக புகார் கூறி வருகின்றன. முக்கியமாக ஹோட்டல்கள், உணவகங்கள், சிறிய உணவகங்கள், ஆட்டோக்கள் போன்றவற்றிற்கு இந்த காஸ்கள் பயன்படுத்தி வருவதாக குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில், இந்த முறைகேடுகளை தடுக்க பொதுவான அடிப்படையில் ஒரு வாடிக்கையாளருக்கு 14.2 கிலோ சிலிண்டரை ஆண்டுக்கு 15 ஆகவும், அதிகபட்சமாக மாதம் 2 முறை மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகளின்படி, அதிக உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம் என்று கருத்து பரவியது. எனவே இதை தடுக்கும் நோக்கத்தில் ஒருவருக்கு ஆண்டுக்கு 15 சிலிண்டர்களுக்கு மேல் தேவைப்பட்டால், அவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். மானியம் அனைத்தையும் பொருத்தினால், அது 12 பேருக்கும் கிடைக்கும். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி கேஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
புதிய விதிகளின்படி, ரேஷன் முறையில், ஒரு மாதத்திற்கு ஒரு இணைப்புக்கு இரண்டு சிலிண்டர்கள் மட்டுமே கிடைக்கும். இதற்கிடையில், எந்த சூழ்நிலையிலும் இந்த எண்ணிக்கை ஒரு வருடத்தில் 15 ஐ தாண்டக்கூடாது. ஒரு வாடிக்கையாளர் எரிவாயு விலைக்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என்றால், அவர் ஆதாரத்தை அளித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். அப்போதுதான் அந்த வாடிக்கையாளர் கூடுதல் நிரப்புதலைப் பெற முடியும்.
இவ்வாறு வீட்டுக்கு ஒதுக்கீடு செய்யும் கேஸ் சிலிண்டர்களை வணிக லாபத்திற்காக விற்பனை செய்தால் சட்டவிரோதமானது என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களின் நிதிச்சுமையும் அதிகரித்துள்ளது. எனவே தவறான பயன்பாடு மற்றும் வீண் செய்வதை தடுக்கவே இந்த முயற்சி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அகில இந்திய எல்பிஜி விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவர் பிஜான்பெஹாரி பிஸ்வாஸ் இந்த நடவடிக்கையை ஆதரிக்கிறோம் என்று தெரிவித்தார். தகவலின்படி,60% வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்தில் 6 சிலிண்டர்களுக்கு மேல் தேவை படுவதில்லை. அதேபோல், 32 சதவீதம் பேர் 9 கேஸ் மட்டுமே எடுக்கிறார்கள். தற்போது கொல்கத்தாவில் வர்த்தக சிலிண்டர் (19 கிலோ) ரூ.1995.50 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.