மேற்கு வங்கத்தில் நடைபெறுகிறது இறுதிகட்ட வாக்குப்பதிவு..
மேற்கு வங்கம் மாநிலத்தின் 35 தொகுதிகளுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு, கேரளம்,பாண்டிச்சேரி மற்றும் அசாம் மாநிலங்களில் ஒரே கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 1, 6, 10, 17, 22 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஏழு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 259 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 35 தொகுதிகளுக்கு இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. காலை7 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவரும் இந்த வாக்குப்பதிவில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
வாக்குப்பதிவின்போது கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றியே பொதுமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இறுதிகட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு, 35 தொகுதிகளிலும் துணை ராணுவப்படையினர் மற்றும் மாநில காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்கம் மட்டுமின்றி, தமிழகம், அசாம், பாண்டிச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாக உள்ளது.