சாமி கும்பிட வந்த பட்டியலின இளைஞரை கோயிலை விட்டு வெளியேற சொன்ன பூசாரி...வெளியான அதிர்ச்சி வீடியோ!
கோயில் பூசாரி பூஜ செய்ய வந்த அவரைத் தடுத்து நிறுத்தி காணிக்கைகளை வாங்க மறுத்து அவரை கோயிலுக்கு வெளியே தள்ளியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் பூசை பொருள்களுடன் சாமி கும்பிட வந்த பட்டியிலின இளைஞர் ஒருவரை கோயிலை விட்டு வெளியேறுமாறு பூசாரி கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், துமகுரு மாவட்டம், குப்பி தாலுகா, நிட்டூர் கிராமத்தில் சில நாள்களுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவம் முன்னதாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ராஜ் எனும் பட்டியலின இளைஞர் முன்னதாக நிட்டூர் கிராமத்தில் உள்ள முல்லகத்தம்மா கோயிலுக்கு பூஜை செய்ய பூ, தேங்காய், தூபக்குச்சிகளுடன் சென்றுள்ளார். ஆனால் கோயில் பூசாரி அவரைத் தடுத்து நிறுத்தி காணிக்கைகளை வாங்க மறுத்து அவரை கோயிலுக்கு வெளியே தள்ளியுள்ளார்.
இச்சம்பவம் குறித்த அதிர்ச்சி தரும் காணொளி இணையத்தில் வெளியாகி முன்னதாக கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Dalit devotees were asked to go out of the temple by priest of Mulakattamma Temple. The devotees had come to the temple with flowers and coconuts. However, priest refused to carry out pooja asking them to move out. #Karnataka #Tumkur #Gubbi #Dalit #Castiesm #Untouchability pic.twitter.com/jzlz6bbay1
— Hate Detector 🔍 (@HateDetectors) October 13, 2022
இந்நிலையில் இளைஞர் தடுத்து நிறுத்தப்பட்ட முல்கத்தம்மா கோயிலில் இன்னும் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து இன்னும் காவல் துறையில் புகார் அளிக்கப்படவில்லை. எனினும் சம்பவம் குறித்த தகவல்களைக் கேட்டறிந்த காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூகநலத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.