Puneeth Rajkumar | அந்த 35 நிமிஷம்.. பக்கத்து ஹாஸ்பிட்டல் போய் இருக்கணும்.. புனித் குறித்து மனம் வருந்திய சகோதரர்
புனித் குறித்து அவரது அண்ணன் சிவராஜ்குமார் தெரிவித்த கருத்து ஒன்று இணையத்தில் பரவி வருகிறது
நடிகர் புனீத் ராஜ்குமாரின் மரணம் என்பது கன்னடத் திரையுலகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த கர்நாடகத்தாலுமே ஏற்றுக்கொள்ள முடியாததாகத்தான் உள்ளது. புனீத் ராஜ்குமார் கன்னடத் திரையுலகத்தில் அனைவராலும் நேசிக்கப்பட்டவர். ’A Man with no haters’ என்கிறது அவரை அறிந்த வட்டாரங்கள். 2002ம் ஆண்டு கன்னடத் திரையுலகில் அப்பு திரைப்படம் மூலம் அறிமுகமான புனித் ராஜ்குமார்.
அதன்பிறகு அப்பு பெயராலேயே அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டார். புனீத் ராஜ்குமார் மறைந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல், அவரது ரசிகர்கள் இருவர் மாரடைப்பால் உயிரிழந்து குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புனித் குறித்து அவரது அண்ணன் சிவராஜ்குமார் தெரிவித்த கருத்து ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதில், உடல்நிலை சரியில்லை என்றதும் புனித்தை மருத்துவமனை அழைத்துச் சென்றோம். கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் ஆனது. ஆனால் அருகிலேயே 5 நிமிட தூரத்தில் இருந்த மருத்துவமனையை நாங்கள் தவறவிட்டோம். ஒருவேளை அந்த மருத்துவமனையில் சேர்த்திருந்தால் புனித் உயிர் பிழைத்திருக்கக் கூட வாய்ப்பிருக்கலாம் என தோன்றுகிறது எனக் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது
உயிரிழந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் கண்கள் தானமாக பெறப்பட்டு, அவரது 2 கண்கள் மூலமாக நவீன மருத்துவ உதவியுடன் 4 பேருக்கு பார்வை கிடைத்தது. புனீத் ராஜ்குமாரின் கண்கள் தானம் செய்யப்பட்டதால், அவரை பின்தொடரும் ஆயிரக்கணக்காக ரசிகர்கள் அவரை போல கண்தானம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கர்நாடகா தலைநகர் பெங்களூர் உள்பட பல்வேறு மாநிலங்களில் நடிகர் புனீத் ராஜ்குமாரின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தங்களது இறப்பிற்கு பின்னர் கண்களை தானம் செய்து கொண்டு வருகின்றனர்.
ரசிகர்களின் இந்த திடீர் கண்தானத்தால் கடந்த 15 நாட்களில் மட்டும் கர்நாடக மாநிலத்தில் சுமார் 6 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தங்களது கண்களை தானாகவே முன்வந்து தானம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Kannada super star #PuneethRajkumar's noble gesture to donate his eyes has created a sort of movement of eye donation in #Karnataka.
— IANSLIFE (@ianslife_in) November 6, 2021
Read: https://t.co/bkZirzKDGb pic.twitter.com/s9G9fEFc1P
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்