மேலும் அறிய

‛பெண்களை பிரச்சினைக்குள் இழுப்பது அராஜகத்திற்கு வழிவகுக்கும்’ -ஜூனியர் என்.டி.ஆர் கருத்து!

எப்போதெல்லாம் பொதுப் பிரச்சினைகளை புறந்தள்ளி, தனிப்பட்ட விமர்சனங்களுக்கு அடிபணிந்து, பெண்களை பிரச்சினைக்குள் இழுக்கிறோமோ அது அராஜகத்திற்கு வழிவகுக்கிறது - ஜூனியர் என்.டி.ஆர்

ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் படுதோல்வியைச் சந்தித்தது. இந்தநிலையில், சந்திரபாபு நாயுடு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக சட்டப்பேரவையில் தான் அவமானப்படுத்தப்பட்டு வருவதாகவும், இத்தனை நாட்கள் தான் அமைதியாக இருந்ததாகவும் கூறினார்.

ஆனால், இன்று தனது மனைவி குறித்து அவதூறாக பேசுவதாகவும், தான் மானத்துடன் வாழ்பவன், இனி என்னால் இதற்குமேல் தாங்கிக்கொள்ள முடியாது என்று கூறி கண்ணீர்விட்டு அழுதார். அடுமட்டுமின்றி இனி இந்த சட்டப்பேரவைக்குள் முதலமைச்சராகத்தான் நுழைவேன் என கூறி பேரவையிலிருந்து வெளியேறினார். இந்தச் சம்பவம் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


‛பெண்களை பிரச்சினைக்குள் இழுப்பது அராஜகத்திற்கு வழிவகுக்கும்’ -ஜூனியர் என்.டி.ஆர் கருத்து!

இந்நிலையில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “நாம் எதைப் பற்றி பேசினாலும் அது நமது ஆளுமையை வரையறுக்கிறது. அரசியலில், விமர்சனங்கள் மற்றும் பதிலடிகள் மிகவும் பொதுவானவை, ஆனால் அவை அனைத்தும் பொதுப் பிரச்சனைகளுக்கு மட்டும்  இருக்க வேண்டுமெயொழிய தனிப்பட்டதாக இருக்கக்கூடாது. 

 

நேற்றைய சட்டப்பேரவை சம்பவம் என்னைத் தூண்டிவிட்டது. எப்போதெல்லாம் பொதுப் பிரச்சினைகளை புறந்தள்ளி, தனிப்பட்ட விமர்சனங்களுக்கு அடிபணிந்து, பெண்களை பிரச்சினைக்குள் இழுக்கிறோமோ அது அராஜகத்திற்கு வழிவகுக்கிறது. அது தவறு. 

பெண்களை மதிப்பது நமது கலாசாரம், அது நமக்குள் பொதிந்துள்ள ஒரு பாரம்பரியம். மேலும் இதுபோன்ற பாரம்பரியத்தை நமது வருங்கால சந்ததியினருக்கும் கொண்டு செல்ல வேண்டும்” என காணொலி வெளியிட்டுள்ளார்.

முன்னதாக சந்திரபாபுவின் குற்றச்சாட்டு குறித்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, “சந்திரபாபு நாயுடு கண்ணீர் வடித்தது ஒரு நாடகம். ஆம். சந்திரபாபு நாயுடுவின் நிலையும், அவர் விரக்தியில் இருக்கிறார் என்பது எனக்கு மட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். மாநில மக்கள் அவரை வெளிப்படையாக நிராகரித்துள்ளனர். அவரது சொந்த தொகுதியான குப்பம் தொகுதியில்கூட, நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு மக்களின் நிராகரிப்பைச் சந்தித்தார்.


‛பெண்களை பிரச்சினைக்குள் இழுப்பது அராஜகத்திற்கு வழிவகுக்கும்’ -ஜூனியர் என்.டி.ஆர் கருத்து!

சந்திரபாபுநாயுடு அனைத்திலும் அரசியல் மைலேஜ் பெற மட்டுமே முயற்சிக்கிறார். இது மிகவும் துரதிஷ்டவசமானது. அப்போது, நான் சபைக்குள் இல்லாவிட்டாலும் அவரது நாடகம் அனைத்து கண்களுக்கும் தெரிந்தது.அவரது குடும்பத்தை பற்றி எங்கள் தரப்பில் பேசியதற்கான எந்த குறிப்பும் இல்லை. ஆனால், என்னுடைய கொல்லப்பட்ட மாமா, தாய் மற்றும் சகோதரி உள்பட எனது குடும்ப உறுப்பினர்கள் பற்றி சந்திரபாபுவே பேசியுள்ளார். நாடாளுமன்றத்தில் உள்ள பதிவுகள் அதை தெளிவாக நிரூபிக்கின்றன” என கூறியிருந்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

பெட்ரோல் கார்களுக்கு ஆபத்து? உலக ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் மாற்றம்! விபரம் இதோ
பெட்ரோல் கார்களுக்கு ஆபத்து? உலக ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் மாற்றம்! விபரம் இதோ
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
பண்டிகை காலம்.. வியாபாரிகளுக்கு நெருக்கடி கூடாது.. போலீசாருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!
பண்டிகை காலம்.. வியாபாரிகளுக்கு நெருக்கடி கூடாது.. போலீசாருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!
"LATE" ஆக வந்ததால் திட்டிய பெற்றோர்..! ஆத்திரத்தில் தாத்தாவை பேட்டால் அடித்துக் கொன்ற பேத்தி - நடந்தது என்ன?

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
Oil Price Hike: அரிசி.. சர்க்கரையை தொடர்ந்து எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
Embed widget