கட்டுக்கட்டாக பணம்.. முதலமைச்சரின் உதவியாளர் வீட்டில் கோடி கோடியாக சிக்கிய ரொக்கம்!
ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் அரசியல் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா மற்றும் பிறரின் வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.11.88 கோடி பணத்தை அமலாக்க இயக்குநரகம் கைப்பற்றியதாகத் தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் அரசியல் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா மற்றும் பிறரின் வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.11.88 கோடி பணத்தை, சட்டவிரோதச் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்கத்துறை இயக்குனரகம் வெள்ளிக்கிழமை கைப்பற்றியதாகத் தெரிவித்துள்ளது.
ஜூலை 8 அன்று, சாஹிப்கஞ்ச், பர்ஹெட், ராஜ்மஹால் மிர்சா சௌகி மற்றும் பர்ஹர்வா உள்பட 19 இடங்களில் அமலாக்கத்துறை இயக்குநரகம் சோதனை நடத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்போது, குற்ற ஆவணங்கள் மற்றும் ரூ. 5.34 கோடி கணக்கில் காட்டப்படாத பணத்தை அமலாக்க இயக்குனரகம் பறிமுதல் செய்தது.
இதுகுறித்து அமலாக்கத்துறை இயக்குநரகம் வெளிட்ட அறிக்கையில், "சட்டவிரோத சுரங்க வழக்கில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், பங்கஜ் மிஸ்ரா, தாஹூ யாதவ் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் 37 வங்கிக் கணக்குகளில் இருந்த 11.88 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக இயங்கி வந்த ஐந்து கல் உடைக்கும் இயந்திரங்கள் மற்றும் அதற்கு சமமான எண்ணிக்கையிலான சட்டவிரோத துப்பாக்கி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட பல்வேறு நபர்களின் வாக்குமூலங்கள், டிஜிட்டல் சான்றுகள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட ஆதாரங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட பணம், வனப்பகுதி உள்பட சாஹிப்கஞ்ச் பகுதியில் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத சுரங்கத்திலிருந்து பெறப்பட்டது என்பது தெரியவந்தது.
இந்தச் சோதனைகளுக்குப் பிறகு, சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச் செயல்களின் வாயிலாக 100 கோடி ரூபாய் தடயம் கண்டுபிடிக்கப்பட்டது. ஐஏஎஸ் அலுவலர் பூஜா சிங்கால், தொழிலதிபராக இருக்கும் அவரது கணவர் மற்றும் பலர் மீது பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்கத்துறை இயக்குநரகம் மே மாதம் சோதனை நடத்தியது.
ஜார்க்கண்ட் சுரங்கச் செயலாளராகப் பொறுப்பேற்றிருந்த 2000ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த ஐஏஎஸ் அலுவலர், அமலாக்கத்துறை இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநில அரசால் இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் மற்றும் அவரது கணவருடன் தொடர்புடைய பட்டய கணக்காளர் சுமன் குமார் என்பவரும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு மொத்தம் 19.76 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்