ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
ரயில் டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்வது குற்றம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு ரயில் பயணிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு மைல்கல் முடிவு என்றும் முறைகேடுகள் குறித்துப் புகாரளிக்குமாறு பொதுமக்களை ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் மனோஜ் யாதவா கேட்டுக்கொண்டுள்ளார்.
நேர்மையற்ற சக்திகளால் டிக்கெட் முறைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுக்க செய்வதன் மூலம், இந்த தீர்ப்பு இந்திய ரயில்வேயின் பயணச்சீட்டு செயல்முறையின் வெளிப்படைத்தன்மையைப் பராமரிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என அவர் கூறினார்.
டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்வது குற்றம்:
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் விரிவாக பேசுகையில், "அனைத்து முறையான பயணிகளுக்கும் பயணச்சீட்டுகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான அதன் பணியில் ஆர்பிஎஃப் உறுதியாக உள்ளது.
தனிப்பட்ட ஆதாயத்திற்காக அமைப்பை தவறாகப் பயன்படுத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராக தொடர்ந்து உறுதியாக செயல்படும். எந்தவொரு முறைகேடுகளையும் புகாரளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன்.
அனைத்து புகார்களுக்கும் உதவி எண் 139 என்பது பொதுவானது. ரயில்மதாத் (RailMadad) தளம் மூலமாகவும் புகாரளிக்கலாம். அனைவருக்கும் நியாயமான, வசதியான பயண அனுபவத்தை உறுதி செய்வதற்கு ஆர்பிஎஃப் செயல்படுகிறது.
புகார் இருக்கா?
கடந்த ஜனவரி 9 ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. பயணச்சீட்டு முறைகளை தவறாகப் பயன்படுத்துவதைக் கண்டறிந்து, உண்மையான பயணிகளுக்கு ரயில் பயணச் சீட்டுகளின் நியாயமான அணுகலை உறுதி செய்தது.
Indian Railway is committed to ensuring fair ticket access for genuine travelers and urges the public to report irregularities to protect the railway system's integrity
— PIB India (@PIB_India) January 12, 2025
The recent judgment by the Hon'ble Supreme Court is a landmark decision in protecting the rights of genuine…
ரயில் டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்வது சமூக குற்றம் என்று கூறிய உச்ச நீதிமன்றம், கொள்முதல், விநியோக முறையைப் பொருட்படுத்தாமல், அங்கீகரிக்கப்படாத ரயில் டிக்கெட்டுகளை கொள்முதல் செய்வது, வழங்குவது குற்றமாகும் என்று கூறியது.
கேரளா, சென்னை உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகளை எதிர்த்து இரயில்வே அமைச்சகம் தாக்கல் செய்த சிறப்பு முறையீட்டு மனுக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது" என்றார்.
இதையும் படிக்க: விவசாயத்திற்குள் புகுந்த சா(தீ) ; அதிகாரிகளால் பரபரப்பான விழுப்புரம்... தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் சாலை மறியல்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

