குளிர்காலத்தில் செரிமான மண்டலத்தின் செயல்பாடு மெதுவாக இருக்கும் என்று சொல்லப்படுவது உண்டு.
காலையில் சீரகம், சோம்பு, பட்டை ஆகிவற்றில் ஏதேனும் ஒன்றை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பது நல்லது.
இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட், ஆன்டி-இன்ஃப்ளமேட்ரி பண்புகள் நிறைந்துள்ளன.
இவை மெட்டபாலிசம் சீராக செயல்படும் உதவும். செரிமான மண்டலத்தின் செயல்பாடு மேம்படும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சளி, இருமல் ஆகிவற்றை தடுக்கவும் உதவும்.
உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவும். சீரகம், சோம்பு இரண்டும் செரிமானத்தை சீர்படுத்தும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும்.