Mahendragiri: இந்தியாவின் அதிநவீன போர்கப்பல்.. இன்று முதல் சேவையில் இணையும் மகேந்திரகிரி.. சிறப்பம்சங்கள் என்ன?
Mahendragiri: மகேந்திரகிரி’ போர்க் கப்பலை துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கரின் மனைவி சுதேஷ் தன்கர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்திய கடற்படைக்காக அதிநவீன அம்சங்களுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘மகேந்திரகிரி’ போர்க் கப்பலை துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கரின் மனைவி சுதேஷ் தன்கர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மும்பையில் உள்ள மஸகான் கப்பல் கட்டும்தளத்தில் நடைந்த நிகழ்ச்சியில், 7-வது போர்க் கப்பல் நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டது. எதிரிகளின் ரேடாரில் சிக்காத வகையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள், அதிநவீன ஆயுதங்கள், தொலைவில் உள்ளவற்றை கண்டறிந்து உணர்வு, அதாவது சென்செஸ் செய்யும் வகையிலான சாதனங்களுடன் இந்தப் போர்க் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.
India’s recent phenomenal economic rise and global ascendancy imperatively call for a modern Navy to protect its maritime interests.
— Vice President of India (@VPIndia) September 1, 2023
It is soothing to note that the issue is being very well attended. #Mahendragiri @indiannavy @SpokespersonMoD pic.twitter.com/aTIYlIAShj
இந்தப் போர்க் கப்பல், உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி வல்லமையின் அடையாளமாக திகழ்கிறது என்று கடற்படை தெரிவித்துள்ளது. பி17ஏ திட்டத்தின்கீழ் மொத்தம் 7 போர்க் கப்பல்கள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு, கடந்த 2019 முதல் 2022 வரை 5 போர்க் கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. அண்மையில் 6-ஆவது போர்க் கப்பலை (விந்தியகிரி) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டுக்கு அர்ப்பணித்திருந்தார். பி17ஏ போர்க் கப்பல்களின் கட்டுமானத்துக்காக 75 சதவீத உபகரங்கள் மற்றும் இதர அமைப்புமுறைகள், உள்நாட்டு குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டன என்பதையும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
’மகேந்திரகிரி போர்க்கப்பல் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை
’17A - frigates' என்ற திட்டத்தின் கீழ் ஒடிசாவில் உள்ள கிழக்கு மலைப்பகுதியில் உள்ள மலைகுன்று ஒன்றின் பெயர் ’மகேந்திரகிரி.’
இந்த வகையான போர்க்கப்பல் இந்திய கடற்பரையினரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஜன்தீப் தன்கர்,” கடல் பகுதிகளில் இந்தியாவின் தேசியக் கொடி பெருமையுடன் பறக்கும். இதன் மூலம் கடல் பகுதிகளில் உலக தரத்திலான பாதுகாப்பிற்கான வழியாக இருக்கும்.” என்று தெரிவித்து கடற்படை வீரர்களை பாரட்டினார்.
மேலும், இராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் சமத்துவத்தை பின்பற்றி 10,000 பெண்கள் பணியாற்றியுள்ளனர்.
ப்ராஜெக்ட் 17A என்றால் என்ன?
ப்ராஜெக்ட் 17A திட்டத்தின் கீழ், M/s MDL இன் நான்கு கப்பல்களும் M/s GRSE இன் மூன்று கப்பல்களும் கட்டுமானத்தில் உள்ளன. திட்டத்தின் முதல் ஐந்து கப்பல்கள் நாட்டிற்காக ஏற்கனவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. அனைத்து போர்க்கப்பல் வடிவமைப்பு நடவடிக்கைகளுக்கான முன்னோடி அமைப்பான இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் ப்ராஜெக்ட் 17A கப்பல்கள் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.