காஷ்மீரில் குடியேற்றத்தை விரிவுபடுத்தும் இந்தியா: அறிக்கையில் வெளியான தகவல்! அமைப்புகள் கண்டனம்!
கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் 5ந் தேதி அன்று காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மோடி அரசு அத்துமீறி ரத்து செய்தது இந்த விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே கருதப்பட்டது
இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்த ஜம்மூ காஷ்மீர் பகுதியில் குடியேறிகளுக்கான தனது விரிவாக்காத்துக்கான திட்டங்களை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
காஷ்மீர் மீடியா சர்வீஸ் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,
”இந்தியாவின் பிரிவினைத் திட்டம் மற்றும் காஷ்மீரிகளின் விருப்பங்களுக்கு எதிராக 1947ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி காஷ்மீர் தலைநகரில் தனது படைகளை சட்டவிரோதமாக தரையிறக்கியதை அடுத்து காஷ்மீரை தனது காலனியாக இந்தியா கருதுகிறது. கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் 5ந் தேதி அன்று காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மோடி அரசு அத்துமீறி ரத்து செய்தது இந்த விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே கருதப்பட்டது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் ஆர் எஸ் எஸ் அமைப்பு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காஷ்மீர் நில அபகரிப்பு நடவடிக்கைகளும் அதன் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது. அதன் சிறப்பு அந்தஸ்தை நீக்கம் இந்துத்வா அமைப்புகளின் கனவாகவே கருதப்படுகிறது” என அறிக்கை கூறியுள்ளது. அந்த வகையில் குடியேற்ற விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகத் தற்போது காஷ்மீரி அல்லாத இந்துக்களை அந்தப் பிரதேசத்தில் குடியேற்றுவதன் மூலம் இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மக்கள்தொகை இயல்பைத் தற்போது மாற்றத் திட்டமிட்டுள்ளது.
மேலும், கடுமையான இராணுவமயமாக்கல் மூலம் இந்தியா காஷ்மீரின் இயற்கை வளங்களை முழுதாகச் சுரண்டுவதாகவும் அந்த அறிக்கையில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. காஷ்மீரின் காலனித்துவத்தை விரிவுபடுத்த மோடி இந்திய வணிக நிறுவனங்களைப் பயன்படுத்துகிறார் என்றும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நிலத்தை ஆக்கிரமித்ததைப் போலவே காஷ்மீரில் இந்தியா ஆக்கிரமிப்பு அதன் விரிவாக்கங்களின் வழி தொடர்வதாகவும் இது ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை மீறுவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
முன்னதாக,
இமயமலை சாரல் என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடமாக இருக்கிறது. இமயமலை சாரலில் உள்ள காஷ்மீர் பகுதி குறிப்பாக சுற்றுலா பயணிகளின் பயண திட்டத்தில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும்.
பூமியின் சொர்க்கம் என அழைக்கப்படும் காஷ்மீர் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த இடமாகும். இந்த ஆண்டு காஷ்மீரில் மேலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் மூடப்பட்டிருந்த பல பகுதிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
இமயமலையின் பரந்து விரிந்த அழகில் பிரமிக்க வைக்கும் அழகிய பசுமையான இடங்களை இங்கு நாம் காணலாம். காஷ்மீர் என்றாலே வயல்வெளிகளில் பூத்துக் குலுங்கும் மலர்களும், பூந்தோட்டங்களும் ,வெள்ளை நிற பனி மூடிய மலைகளும், அழகிய வெள்ளி நதிகளும் கண்களுக்கு விருந்தாகும். இவற்றின் இயற்கை அழகை ரசிப்பதற்காகவே இந்தியா மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் காஷ்மீரை நோக்கி படையெடுக்கின்றனர். அந்த வகையில் காஷ்மீரில் சுற்றுலா பயணிகளை மேலும் மகிழ்விக்கும் விதமாக பல முக்கியமான இடங்கள் பனிப் பிரதேசங்கள் திறக்கப்பட உள்ளன.
சுமார் 70 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக காஷ்மீரில் அடர்ந்த பனிப்பொழிவு கொண்ட மலைப்பிரதேச பகுதிகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது. தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் காஷ்மீர் முழுவதுமே சுற்றிலும் ஒரு அடர்ந்த பனிப் போர்வையின் கீழ் சூழப்பட்டது போலவே காட்சியளிக்கும்.
பொதுவாக கடுமையான குளிர்காலத்தில் காஷ்மீரின் பல பகுதிகளுக்கு பயணம் செய்ய தடை செய்யப்பட்டிருக்கும். காஷ்மீரில் எழுபது ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட மிகவும் பனிப் பொழிவு மிக்க சுற்றுலா தலங்களான கர்னா, சோன்மார்க் மற்றும் குரேஸ் போன்ற சில பிரபலமான அழகிய இடங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீரில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில்
தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் இந்த குறிப்பிட்ட பகுதிகள் திறக்கப்பட உள்ளன.
மேலும் புதிதாக திறக்கப்பட உள்ள கர்னா, சோன்மார்க் மற்றும் குரேஸ் உள்ளிட்ட காஷ்மீரின் மலைப்பிரதேசங்களில் பனி படர்ந்த இடங்களுக்கு ஹெலிகாப்டர் சேவைகளை தொடங்குவது குறித்தும் சுற்றுலாத்துறை ஆலோசனை மேற்கொண்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் கோடை காலங்களில் தான் இந்த இடங்களை பார்வையிட விரும்புவர். ஆனால் ஆண்டு தோறும் ஜம்மு மற்றும் காஷ்மீரை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்லக் கூடிய அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையிலும் அதேபோல் அங்குள்ள மக்களின் தொழில் துறையை விருத்தி செய்யும் நோக்கத்துடனும் இந்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் ஜம்மு காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரம் இந்த சுற்றுலாத்துறை நம்பித்தான் உள்ளது.
காஷ்மீரின் குல்மார்க் நகரம் குளிர்காலத்தில் எப்போதும் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் இடமாக இருக்கிறது. அதேபோல் மத்திய காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் உள்ள தூத்பத்ரி சுற்றுலா பட்டியலில் அண்மையில் இணைக்கப்பட்ட இடமாகும். குல்மார்க் மற்றும் தூத்பத்ரி ஆகிய இடங்களுக்கு சாலை வழியாக பயணிக்கலாம். பனியால் மூடப்படாத குரேஸ் பகுதியை பார்க்க விரும்புவோர் ஜூன் முதல் செப்டம்பர் வரை பயணங்களைத் திட்டமிடலாம். கிரேட்டர் இமயமலை வழியாக சுற்றுலா பயணிகள் இந்த இடத்தை அடையலாம்.
குரேஸ் செல்வோர் காஷ்மீரின் பழமையான பழங்குடியினரின் ஒரு பிரிவான ஷைனா மொழி பேசும் டார்ட்களின் கலாச்சாரத்தை பார்த்து ரசிக்கும் வாய்ப்பை பெறலாம். அஸ்டோர், கில்கிட் மற்றும் சிலாஸ் ஆகிய இடங்களில் இருந்து கட்டுப்பாட்டுக் கோட்டால் துண்டிக்கப்பட்ட பகுதிதான் குரேஸ் ஆகும். கிஷங்கங்கா பள்ளத்தாக்கில் மலையேற்றம், முகாம் மற்றும் மீன்பிடித்தல் என பல அழகிய பகுதிகளைக் கொண்ட ஒரு சாகச சுற்றுலாத் தலமாக குரேஸ் திகழ்கிறது.