Blue Aadhaar Card: நீல நிற ஆதார் அட்டை யாருக்கானது? வெள்ளை ஆதாரிலிருந்து எப்படி மாறுபடுகிறது? விவரங்கள் இதோ..!
Blue Aadhaar Card: நீல நிற மற்றும் வெள்ளை நிற ஆதார் அட்டை இடையேயான வித்தியாசத்தை இந்த தொகுப்பில் அறியலாம்.
Blue Aadhaar Card: நீல நிற ஆதார் அட்டை யாருக்கானது? அதற்கு எப்படி விண்ணப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
நீல நிற ஆதார் அட்டை:
இந்தியாவில், பல்வேறு வகையான அரசு மற்றும் அரசு சாரா சேவைகளைப் பெற ஆதார் அட்டை மிகவும் அவசியமான ஆவணமாக உள்ளது. பரவலாக காணப்படும் வெள்ளை நிற ஆதார் அட்டையைத் தவிர, குழந்தைகளுக்காக அரசாங்கம் பிரத்யேகமாக தயாரிக்கும் நீல நிற ஆதார் அட்டையும் உள்ளது. இது 'பால் ஆதார் அட்டை' என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பின்புற நிறம் வெள்ளைக்குப் பதிலாக நீல நிறத்தில் இருக்கும்.
யாருக்கு நீல நிற ஆதார் அட்டை?
நீல நிற ஆதார் அட்டை குழந்தைகளுக்காக மட்டுமே தயாரிக்கப்படுகிறது என்று ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். ஐந்து வயது அல்லது அதற்கும் குறைவான குழந்தைகளுக்காக நீல நிற ஆதார் அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. 5 வயதுக்குப் பிறகு, 12 இலக்கங்களைக் கொண்ட இந்த நீல நிற ஆதார் அட்டை தானாகவே செல்லாததாகிவிடும்.
நீல ஆதார் அட்டை Vs வெள்ளை ஆதார் அட்டை
முதல் வித்தியாசம் என்னவென்றால், நீல நிற ஆதார் அட்டை ஐந்து அல்லது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே செய்யப்படுகிறது. இரண்டாவது பெரிய விஷயம் என பார்த்தால், இந்த ஆதார் அட்டையில் குழந்தைகளின் பயோமெட்ரிக் தகவல்கள் இருக்காது.
5 வயதுக்குப் பிறகு செல்லாது
குழந்தைகள் 5 வயதைத் தாண்டியவுடன், அவர்களுக்கான நீல நிற ஆதார் அட்டை காலாவதியாகிவிடும். அதன் பிறகு, 15 வயது வரை செல்லுபடியாகும் புதிய ஆதார் அட்டையை உருவாக்க வேண்டும். 15 வயதிற்குப் பிறகு, புதிய ஆதார் அட்டையை உருவாக்க வேண்டும், அதில் பயோமெட்ரிக் தகவல்களும் அவசியம்.
நீல ஆதார் அட்டைக்கான ஆவணங்கள்
UIDAI இன் படி, குழந்தைகளின் பெற்றோர்கள் குழந்தைகளின் பள்ளி அடையாள அட்டை மூலம் நீல நிற ஆதார் அட்டையைப் பெறலாம். குழந்தை மிகவும் இளமையாக இருந்து, இன்னும் பள்ளிக்குச் செல்லத் தொடங்கவில்லை என்றால், ஆதார் அட்டையைப் பெற குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது குழந்தை பிறந்த நேரத்தில் மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட டிஸ்சார்ஜ் சீட்டைக் கொடுக்க வேண்டும்.
நீல நிற ஆதார் பதிவு செய்வது எப்படி?
நீல நிற ஆதார் அட்டையைப் பெற, நீங்கள் உங்கள் குழந்தையுடன் பதிவு மையத்திற்குச் செல்ல வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களையும் எடுக்க மறக்காதீர்கள். பதிவு அலுவலகத்திற்குச் சென்று, குறிப்பிடப்பட்ட ஆவணங்களுடன் பதிவு படிவத்தை நிரப்பவும்.
பெற்றோரின் ஆதார் அவசியம்
உங்கள் குழந்தையின் நீல நிற ஆதார் அட்டை உங்கள் ஆதார் அட்டையில் உருவாக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, உங்கள் ஆதார் அட்டையை பதிவு அலுவலகத்திற்கும் எடுத்துச் செல்லுங்கள்.
பயோமெட்ரிக் இல்லையென்றால், என்ன?
மேலே குறிப்பிட்டுள்ளபடி, நீல நிற ஆதார் அட்டைக்கு குழந்தையின் பயோமெட்ரிக் தேவையில்லை, குழந்தையின் புகைப்படம் மட்டுமே கிளிக் செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து தேவையான வெரிஃபிகேஷன் மேற்கொள்ளப்படும்.
நிரந்தர மொபைல் எண் அவசியம்:
நீல நிற ஆதார் அட்டைக்கான பதிவு படிவத்தை நிரப்பும்போது, நீங்கள் நிரந்தர மொபைல் எண்ணையும் கொடுக்க வேண்டும், இந்த மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP மூலம் மட்டுமே ஆதார் அட்டை பதிவு செய்து தரப்படும்.
60 நாட்களில் நீல நிற ஆதார்:
சமர்பித்த ஆவணங்கள் மற்றும் மொபைல் எண்ணைச் சரிபார்த்த பிறகு, 60 நாட்களுக்குள் நீல நிற ஆதார் அட்டையைப் பெறுவீர்கள். நீங்கள் விரும்பினால், உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி UIDAI இணையதளத்திற்குச் சென்று நீல நிற ஆதார் அட்டை நகலையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.