Watch Video : எம்மாவ்.. நில்லு நாங்களும் வரோம்..! அம்மா புலியை பின்தொடர்ந்த குட்டிகள்.. வைரலாகும் வீடியோ..!
Watch Video : அம்மா புலியுடன் குட்டிகளின் வீடியோ ஒன்று வைரல் ஆகியுள்ளது.
பூமியில் உள்ள பிற உயிரினங்களின் குறும்புகளை நடவடிக்கைகளை ரசிக்கும் பழக்கம் மனிதர்களுக்கு உண்டு. அதுவும் சமூக ஊடகங்களின் வளர்ச்சிக்குப் பிறகு யானை, புலிகள், சிங்கம் குரங்கு உள்ளிட்ட வன விலங்குகளின் சேட்டை வீடியோக்கள் வைரல் ஆவதும் பயனர்களும் அதை க்யூட்டான கமெண்ட்களுடன் பகிர்வதும் வழக்கமாகிவிட்டது. பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இதுபோன்ற வீடியோக்கள் அன்றைய நாளினை அழகாக மாற்றிவிடுகின்றன.
மத்தியp பிரதேசத்தில் (Madhya Pradesh's Pench Tiger Reserve) உள்ள பென்ச் புலிகள் காப்பகத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைராகியுள்ளது.
பிரபல சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் லாலன் கோப் பென்ச் ( Lallan Goap Pench) என்பவர் பதிவிட்டுள்ள வீடீயோ வைரல் ஆகிவருகிறது. இவர் வனப்பகுதிகளைச் சுற்றிக் காட்டும் சஃபாரி நிர்வகிப்பாளர்.
View this post on Instagram
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள வீடியோவின் விவரம்:
அடர்ந்த காடுகளுக்கு இடையே அம்மா புலியை பின்தொடர்ந்து செல்லும் புலிக் குட்டிகளின் வீடியோ அது. அம்மா புலி கம்பீரமாக நடந்து செல்கிறது. அம்மா புலி திரும்பிக் கூட பார்க்கவில்லை. அவற்றின் நான்குக் குட்டிகளும் அம்மா செல்லும் வழியிலே பின்னாடியே செல்கிறது. பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது.
இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது 4.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. பலருக்கும் இது மிகவும் பிடித்துபோய்விட்டது.
இதற்கு பலரும் கமெண்ட் பதிவிட்டுள்ளனர். இயற்கையின் ஆச்சர்யம். அழகு. அம்மாவுடன் அழகாக செல்லும் குட்டிகள் என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அழகான வீடியோவைப் பகிந்துள்ள நபருக்கு பார்வையாளர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
மேலும் வாசிக்க..
Thaipusam History: ஒரே நாளில் இத்தனை அதியசங்களை செய்த முருகன்.. இதுவே! தைப்பூசம் உருவான வரலாறு..!