மேலும் அறிய
Advertisement
Headlines Today : காமன்வெல்த்தில் இந்தியா தங்க மழை... நல்லக்கண்ணுவுக்கு தகைசால் விருது... குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப்.. இன்னும் பல!
Headlines Today : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு நல்லக்கண்ணு தேர்வு
- விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் இருமடங்காக உயர்த்தப்படும் என தமிழக அரசு தகவல்
- மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் நேற்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு
- 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 75 அரசுப் பள்ளிகளில் இருந்து 750 மாணவிகள் இணைந்து ஆசாதிசாட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளனர்.
- தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சி: விண்ணப்பத் தேதியை மேலும் நீட்டிக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்
- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க அறிவுறுத்தல்
- நாணயத்திற்கு ஒரு பக்கம் போல வளர்ச்சித் திட்டமும், சமூக மேம்பாடும் அவசியம் ; அதுவே திராவிட மாடல் : முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு
- தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியா :
- நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக 11ம் தேதி பதவியேற்கிறார் ஜெகதீப் தன்கர்
- தமிழ்நாட்டையும் சேர்த்து இந்தியாவில் மொத்தம் 11 மாநிலங்களில் 56,611 பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடம் கற்பிக்கப்படுவதாக மத்திய அரசு தகவல்
- திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா, லடாக்கின் உயரிய சிவிலியன் கவுரவமான ‘dPal rNgam Duston’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
- உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் டாட்டூ குத்திய இருவருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
- மகாராஷ்டிராவில் ரூ.1,403 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் : ஆர்கானிக் கெமிஸ்ட்ரி பட்டதாரி கைது
உலகம் :
- காபூல் குண்டுவெடிப்பில் 8 பேர் பலி : பொறுப்பு ஏற்றுக்கொண்ட ஐஎஸ் பயங்கரவாதிகள்
- இலங்கை துறைமுகத்துக்கு உளவு கப்பல் அனுப்புவதை ஒத்திவையுங்கள் : சீனாவுக்கு கோரிக்கை வைத்த இலங்கை
- இலங்கையில் கடந்த மே மாதம் 30ம் தேதி முதல் இதுவரை 23 க்கும் மேற்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தகவல்
விளையாட்டு :
- காமல்வெல்த் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு சென்று அசத்தல்
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4வது டி 20 போட்டி : 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி அசத்தல்
- காமன்வெல்த் மல்யுத்தத்தில் பாகிஸ்தான் வீரரை வீழ்த்தி 6வது தங்கம் வென்ற நவீன்
- காமன்வெல்த் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு வெண்கலம் வென்று அசத்திய பூஜா கேலோத்
- செஸ் ஒலிம்பியாட்டில் உலக தரவரிசையில் 5-ஆம் நிலை வீரரை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் அசத்தல்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion