மேலும் அறிய
Advertisement
Headlines Today : மருத்துவமனையில் ரஜினிகாந்த்... மதுரையில் முதல்வர் ஸ்டாலின்....மோடி சுற்றுப்பயணம்... இன்னும் பல!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் தீடீரென சிகிச்சைக்கு அனுமதி
- வழக்கமான உடல்பரிசோதனைக்காக மட்டுமே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி – லதா ரஜினிகாந்த் தகவல்
- நடிகர் ரஜினிகாந்த் தீபாவளிக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் – ஒய்.ஜி.மகேந்திரன் தகவல்
- நடிகர் ரஜினிகாந்த் உடல்நலத்துடன் உள்ளார். வதந்திகளை நம்ப வேண்டாம் – ரசிகர் மன்றம் வேண்டுகோள்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரைக்கு சுற்றுப்பயணம் செல்கிறார்.
- மதுரைக்கு சுற்றுப்பயணம் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கீழடி அகழாய்வை நேரில் பார்வையிடுகிறார்.
- மதுரையில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.
- மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள மு.க.ஸ்டாலின் கலைஞர் நூலகம் அமையும் இடத்தையும் நேரில் ஆய்வு செய்கிறார்.
- இல்லம் தேடிக்கல்வி திட்டம் குறித்து எந்த சந்தேகமும் தேவையில்லை – முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
- மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
- முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் இஸ்லாமியர்களுக்கு துரோகம் விளைவித்ததாக குற்றம்சாட்டிய ஜே.எம்.பஷீர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்
- சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை
- தமிழ்நாட்டில் புதியதாக 1061 பேருக்கு கொரோனா தொற்று – கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக 12 பேர் கொரோனாவால் தமிழ்நாட்டில் உயரிழப்பு
- தமிழ்நாட்டில் நாளை 7வது மெகா தடுப்பூசி முகாம் – இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுவதற்காக சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு
இந்தியா :
- 5 நாள் சுற்றுப்பயணமாக வெளிநாடு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி
- இத்தாலி, வாடிகன் மற்றும் ஸ்காட்லாந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் அடுத்த 5 நாட்களில் பிரதமர் பங்கேற்கிறார்
- இத்தாலி நாட்டின் ரோம் நகரில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
- 5 நாள் சுற்றுப்பயணத்தில் வாடிகன் செல்லும் பிரதமர் மோடி போப் ஆண்டவரை நேரில் சந்தித்து உரையாட உள்ளார்.
உலகம் :
- முகநூல் நிறுவனம் மெடா என புதியதாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- ரஷ்யாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்போர் விகிதம் அதிகரித்து வருவதால், அந்த நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
விளையாட்டு :
- உலககோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா நேற்று 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- உலககோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை பாகிஸ்தான் அணி இன்று நேருக்கு நேர் சந்திக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion