மேலும் அறிய
Advertisement
News Headlines | கனமழை எச்சரிக்கை.. மேட்டூர் அணை திறப்பு.. சில முக்கியச் செய்திகள்.!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
- தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
- சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிப்பு
- மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால் உபரிநீர் திறப்பு
- மேட்டூர் அணையில் 5 ஆயிரம் கன அடி நீராக திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு 20 ஆயிரம் கன அடி நீராக அதிகரிப்பு
- கனமழை காரணமாக திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
- நுங்கம்பாக்கம், அசோக்நகர், தி.நகர், புரசைவாக்கம், அரும்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியாததால் பொதுமக்கள் மிகுந்த அவதி
- சென்னையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது நாளாக நேற்று நேரில் ஆய்வு – பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்
- சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு
- வானிலை நிலவரங்களுக்கு ஏற்ப அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
- தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்கள் மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – வருவாய்த் துறை அமைச்சர் வேண்டுகோள்
- நாளை பெய்ய உள்ள அதிகனமழையை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் தகவல்
- சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணப் பணிகளை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்
- சென்னையில் வெள்ள நிவாரண முகாம்களில் 1000 பேர் வரை தங்கவைப்பு – தி.நகரில் தேங்கியுள்ள வெள்ள நீரை அகற்ற நடவடிக்கை
- மத்திய பிரதேச அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பச்சிளங்குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு
- தமிழ்நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் உள்பட 119 பேருக்கு பத்ம விருதுகள் – டெல்லியில் குடியரசுத் தலைவர் வழங்கினார்
- உலககோப்பை டி20 ஆட்டத்தில் சூப்பர் 12 ஆட்டத்தில் நமீபியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
- நமீபியாவுடனான ஆட்டத்துடன் டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன்சியில் இருந்து விராட்கோலி விலகினார்.
- உலககோப்பை டி20 தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவிசாஸ்திரி விலகியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
க்ரைம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion