மேலும் அறிய
Advertisement
Headlines | நீட்.. மேகதாது.. கொரோனா.. இன்றைய தலைப்புச் செய்திகள் சில!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
- கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு எந்த அனுமதியும் அளிக்கக்கூடாது – அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
- மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு – அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு
- மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 12-ந் தேதி நடைபெறும் – மத்திய கல்வி அமைச்சர் தகவல்
- நீட் தேர்விற்கு இன்று மாலை 5 மணி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் – மத்திய அரசு அறிவிப்பு
- நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது மிகப்பெரிய சட்டப்போராட்டம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- தமிழக மாணவர்கள் நீட் தேர்விற்கு தயாராக வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
- அமெரிக்கா, சிங்கப்பூரில் உள்ள தமிழக கோவில்களின் சிலைகளை மீட்கப்படும் - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
- வெளிமாநிலங்களில் உள்ள தமிழக கோயில்களின் ஆபரணங்களும் மீட்கப்படும் – அமைச்சர் சேகர்பாபு உறுதி
- தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2652 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு
- கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் 36 பேர் கொரோனா வைரசால் உயிரிழப்பு
- வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எனக்கு இல்லை – நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டம்
- ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்பட்டு ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாகவே செயல்படும் – ரஜினிகாந்த் அறிவிப்பு
- தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்ட டி.இ.டி. தேர்வை மீண்டும் நடத்த தமிழக அரசு ஆயத்தம்
- சபரிமலை கோயில் பக்தர்கள் தரிசனத்திற்காக இணையவழி முன்பதிவு தொடக்கம்
- வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலமாக ஆலோசனை
- 450 கி.மீ. இலக்கைத் தாக்க வல்ல பிரமோஸ் ஏவுகணை சோதனை முயற்சி தோல்வி
- ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு – கால்நடைகள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது
- இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 37 ஆயிரம் பேருக்கு புதியதாக கொரோனா
- கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 724 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு
- இந்தியாவில் கொரோனா 3வது அலை தவிர்க்க முடியாதது- மருத்துவ சங்கம் எச்சரிக்கை
- கொரோனா மூன்றாவது அலை எச்சரிக்கையால் மத்திய மற்றும் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டாம் – மருத்துவ சங்கம் அறிவுறுத்தல்
- கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு – மத்திய நிபுணர்கள் குழு கேரளா சென்றது
- யூரோ கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் கோல் அடிக்காத இங்கிலாந்து வீரர்கள் மீது இனவெறி விமர்சனம் – பிரதமர் போரிஸ் ஜான்சன் கண்டனம்
- பெல்ஜியம் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்த 90 வயது மூதாட்டிக்கு பிரிட்டனில் கண்டறியப்பட்ட ஆல்பா கொரோனா வைரஸ், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட பீட்டா வைரஸ் இருந்தது கண்டுபிடிப்பு - மருத்துவர்கள் அதிர்ச்சி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion