12 மணி தலைப்புச் செய்திகள்
இன்றைய நாளின் பகல் 12 மணிக்கான தலைப்பு செய்திகள்
*தமிழகம் மற்றும் புதுச்சேரி பிரசாரத்திற்காக தமிழகம் வந்தார் பிரதமர் மோடி. தாராபுரத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
*பிரதமர் நிகழ்ச்சிக்கு சென்ற அமைச்சர் வேலுமணி பாதுகாப்புக்குச் சென்ற கார் திருப்பூர் அருகே விபத்து. 2 காவலர்கள் படுகாயம்.
*புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரும் தொழிலதிபருமான புவனேஸ்வரன் வீட்டில் வருமான வரித்துறை சாேதனை. இன்று மாலை புதுச்சேரியில் பிரதமர் மோடி பிரசாரம் செய்யவிருக்கும் நிலையில் சாேதனை நடந்து வருகிறது.
*தென்காட்சியில் வாட்ஸ் ஆப், பேஸ்புக்கில் தபால் வாக்கு பதிவு செய்த விவகாரத்தில் பள்ளி ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் கைது
*வெயிலை விட கொடுமையானது அதிமுக ஆட்சி என பிரசாரத்தில் ஸ்டாலின் குற்றச்சாட்டு
*விலைவாசி தமிழகத்தில் கட்டுப்பாடாக உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம்
அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய வந்துள்ளதாக சென்னையில் கமல் பிரசாரம்
*ஊழலில் ஒன்றுபடும் அதிமுக-திமுக: பிரசாரத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டு
*மேற்குவங்கம் மற்றும் அசாமில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று நிறைவு பெறுகிறது.
*வவ்வாலில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக உலக சுகாதார நிறுவனம் புதிய தகவல்
*மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான ஆர்பாட்டத்தில் இதுவரை 510 பேர் சுட்டிக்கொலை என அதிர்ச்சி தகவல்