மேலும் அறிய

Corona | 15 கொரோனா சாதனங்களுக்கு விலை இவ்வளவுதான்! - அரசாணை விவரம்

200 மி.லி. அளவுக்கு சானிடைசர் அதிகபட்சமாக 110 ரூபாய், என் 95 முகக்கவசம் 22 ரூபாய், இரட்டை மடிப்பு அறுவை சிகிச்சை முகக்கவசம் 3 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது

கொரோனா வந்ததுதான் வந்தது, ஏகப்பட்ட பிரச்னைகளையும் கையோடு கூட்டிவந்து விட்டது. அதில், பரம்பரை சேமிப்பை எல்லாம் உறிஞ்சி எடுக்கும் சிகிச்சை செலவுக்கு இணையாக இல்லாவிட்டாலும், தவிர்க்கவே முடியாத செலவாக வந்துநிற்கிறது, தற்காப்பு சாதனங்கள், பொருள்களின் விலை!

பொதுமக்களில் பலர் கேள்விப்பட்டிருக்கக்கூட வாய்ப்பு இல்லாத பல பொருள்களும் இப்போது தெருமுனைக் கடையில் கூட சர்வ சாதாரணமாக விற்கப்படுகிறது. அரசாங்கத்தால் அனுமதி பெற்று தெருத்தெருவாக வண்டியில் வந்து விற்பனை ஆகாதுதான் பாக்கி! மாஸ்க் எனப்படும் முகக்கவசத்தை ஊர்ப்புறம், நகர்ப்புறம் என வேறுபாடு இல்லாமல், சாலையோரம் ஆங்காங்கே விற்கப்படுவதைப் பார்க்கமுடிகிறது. ஒரே விலையாக இல்லாவிட்டாலும் பொருளின் தரத்துக்கும் நிறத்துக்கும் தினுசுக்கும் ஏற்றபடி பணத்தை அள்ளித்தர வேண்டியிருக்கிறது. முகக்கவசம், கையுறை, கவச உடை, முகக்கேடயம் (ஃபேஸ் ஷீல்டு) போன்றவற்றை மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மட்டுமின்றி, அனைவரும் பயன்படுத்துகின்றனர். அதுவே சரியானதும் கூட. இவற்றின் விலை இன்னதுதான் என நிர்ணயிக்கப்படாமல் இருந்ததால், கொரோனா முதல் அலையில் அதிக விலைக்கு இவை விற்பனை செய்யப்பட்டன. இரண்டாம் அலையில் ஓரளவுக்கு மட்டுப்பட்டாலும்கூட ஒரே தரமுள்ள பொருளுக்கு வெவ்வேறு விலை வைத்து விற்பது தொடர்கிறது. இது குறித்து ஏராளமானவர்கள் ஊடகங்களில், சமூக ஊடகங்களில் தங்கள் குமுறலை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில், மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர், கொரோனாவை எதிர்கொள்வதற்கு அத்தியாவசியமான இந்தப் பொருள்கள் அனைவருக்கும் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என அரசுக்கு எழுதினார். கொரோனாவை முன்னிட்டு நடைமுறையில் இருந்துவரும் 1949 தமிழ்நாடு அத்தியாவசியப் பொருள்கள் கட்டுப்பாட்டு முறைப்படுத்தல் சட்டத்தின்படி, முகக்கவசம் முதலிய 15 சாதனங்கள், பொருள்களை, ’அத்தியாவசியப் பொருள்கள்’ என அறிவிக்கை செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். அதை ஏற்று முகக்கவசம் உள்பட்ட 15 பொருள்களையும் அத்தியாவசியப் பொருள்கள் என அறிவிக்கை செய்யப்படுகிறது என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி, 200 மி.லி. அளவுக்கு சானிடைசர் அதிகபட்சமாக 110 ரூபாய்வரைதான் விற்பனை செய்யப்படவேண்டும். இதைப்போல என் 95 முகக்கவசம் 22 ரூபாய்க்கும் இரட்டை மடிப்பு அறுவைசிகிச்சை முகக்கவசம் 3 ரூபாய்க்கும், மும்மடிப்பு அறுவைசிகிச்சை முகக்கவசம் 4 ரூபாய்க்கும் இதிலேயே நெய்யப்படாத செயற்கை இழைப் பூச்சு கொண்டவை 4.5 ரூபாய்க்கும் அதிகபட்சமாக விற்கப்பட வேண்டும். பயன்படுத்திவிட்டு தூக்கிப்போடக்கூடிய மேலங்கி 12 ரூபாய், அறுவைச்சிகிச்சை அங்கி 65 ரூபாய், தனிநபர் பாதுகாப்பு கவசம் ஒன்று 273 ரூபாய் என அதிகபட்ச சில்லறை விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையிலேயே அதிக நேரம் இருப்பவர்கள் பயன்படுத்தக்கூடிய சுத்திகரிக்கப்பட்ட கையுறை 15 ரூபாய்க்கும், பரிசோதனை செய்வதற்கான கையுறை 5.75 ரூபாய்க்கும் அதிகபட்ச விலைக்கு விற்பனை செய்யப்படவேண்டும்.

அதிக அடர்த்தியான ஆக்சிஜன் தேவை உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் தெரபி அளிக்கையில் தேவைப்படும் முகக்கவசம் 80 ரூபாய்க்கும், ஆக்சிஜன் முகக்கவசம் 54 ரூபாய்க்கும், ஈரப்பதம் மானிட்டர் செய்யும் ஆக்சிமீட்டர் 1520 ரூபாய்க்கும், விரல்நுனி மூலம் நாடித்துடிப்பையும், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனை அளக்கும் ஆக்சிமீட்டர் 1500 ரூபாய்க்கும், ஃபேஸ் ஷீல்டு எனப்படும் முகக்கேடயம் 21 ரூபாய்க்கும்வரைதான் அதிகபட்சமாக விற்கவேண்டும் என்று அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சூப்பர் திட்டங்கள்! மானியங்கள் To ஓய்வூதியம் வரை - உடனே தெரிஞ்சுக்கோங்க
விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சூப்பர் திட்டங்கள்! மானியங்கள் To ஓய்வூதியம் வரை - உடனே தெரிஞ்சுக்கோங்க
Tiruchendur: நாளை கும்பாபிஷேகம்.. பக்தர்கள் கடலில் திளைக்கும் திருச்செந்தூர் - எத்தனை மணிக்கு குடமுழுக்கு?
Tiruchendur: நாளை கும்பாபிஷேகம்.. பக்தர்கள் கடலில் திளைக்கும் திருச்செந்தூர் - எத்தனை மணிக்கு குடமுழுக்கு?
PAN Aadhar Voter ID Update: ஸ்கேம்.. இறந்தவர் பெயரை ஆதார், பான், வோட்டர் ஐடியில் நீக்குவது எப்படி? மோசடிகளை தவிர்க்க வழி
PAN Aadhar Voter ID Update: ஸ்கேம்.. இறந்தவர் பெயரை ஆதார், பான், வோட்டர் ஐடியில் நீக்குவது எப்படி? மோசடிகளை தவிர்க்க வழி
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சூப்பர் திட்டங்கள்! மானியங்கள் To ஓய்வூதியம் வரை - உடனே தெரிஞ்சுக்கோங்க
விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சூப்பர் திட்டங்கள்! மானியங்கள் To ஓய்வூதியம் வரை - உடனே தெரிஞ்சுக்கோங்க
Tiruchendur: நாளை கும்பாபிஷேகம்.. பக்தர்கள் கடலில் திளைக்கும் திருச்செந்தூர் - எத்தனை மணிக்கு குடமுழுக்கு?
Tiruchendur: நாளை கும்பாபிஷேகம்.. பக்தர்கள் கடலில் திளைக்கும் திருச்செந்தூர் - எத்தனை மணிக்கு குடமுழுக்கு?
PAN Aadhar Voter ID Update: ஸ்கேம்.. இறந்தவர் பெயரை ஆதார், பான், வோட்டர் ஐடியில் நீக்குவது எப்படி? மோசடிகளை தவிர்க்க வழி
PAN Aadhar Voter ID Update: ஸ்கேம்.. இறந்தவர் பெயரை ஆதார், பான், வோட்டர் ஐடியில் நீக்குவது எப்படி? மோசடிகளை தவிர்க்க வழி
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
போலீஸ் ரொம்ப மோசம்.. ஸ்டேஷனில் எது நடந்தாலும் தெரியாது.. உண்மையை உடைத்த பொன்.மாணிக்கவேல்!
Keerthy Suresh : ஈரோட்டிற்கு திடீர் விசிட் அடித்த கீர்த்தி சுரேஷ்.. TVK.. TVK என கத்திய ரசிகர்கள்.. பரபரப்பான வீடியோ
Keerthy Suresh : ஈரோட்டிற்கு திடீர் விசிட் அடித்த கீர்த்தி சுரேஷ்.. TVK.. TVK என கத்திய ரசிகர்கள்.. பரபரப்பான வீடியோ
புதுச்சேரியில் BSNL அதிரடி சலுகை! ரூ.100-க்கு 45 நாட்களுக்கு டேட்டா, அழைப்புகள் இலவசம்! மிஸ் பண்ணாதீங்க!
புதுச்சேரியில் BSNL அதிரடி சலுகை! ரூ.100-க்கு 45 நாட்களுக்கு டேட்டா, அழைப்புகள் இலவசம்! மிஸ் பண்ணாதீங்க!
உலக சினிமாவில் இடம்பிடித்த டூரிஸ்ட் ஃபேமிலி.. முதல் 10 படங்களில் இதுதான்.. குவியும் வாழ்த்து
உலக சினிமாவில் இடம்பிடித்த டூரிஸ்ட் ஃபேமிலி.. முதல் 10 படங்களில் இதுதான்.. குவியும் வாழ்த்து
Volkswagen Car Offers: ஃபோல்க்ஸ்வாகன் ஆட்டோ ஃபெஸ்ட் ஸ்டார்ட் - ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி, எந்தெந்த கார்களுக்கு தெரியுமா?
Volkswagen Car Offers: ஃபோல்க்ஸ்வாகன் ஆட்டோ ஃபெஸ்ட் ஸ்டார்ட் - ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி, எந்தெந்த கார்களுக்கு தெரியுமா?
Embed widget