மேலும் அறிய

டிச.2020 முதல் நவ. 2021 வரை 14 தீவிரவாதிகள் கைது; 165 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்: மத்திய அரசு தகவல்

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இன்று மாநிலங்களவையில் காஷ்மீரில் தீவிரவாதிகள் ஒழிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இன்று ராஜ்யசபாவில் காஷ்மீரில் தீவிரவாதிகள் ஒழிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய உள்துரை அமைச்சகத்தின் இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்துள்ளார்.

1. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் உடுருவல், தீவிரவாத தாக்குதல் ஆகியன அதிகரித்துள்ளதா?
2. ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினர் எத்தனை பேர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்?
3. அக்டோபர் 2020 முதல் அக்டோபர் 2021 வரை மாதம் வாரியாக எத்தனை தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
4. கடந்த 12 மாதங்களில் எத்தனை தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். எத்தனை பேர் கொல்லப்பட்டனர்?
தீவிரவாத ஒழிப்பு தொடர்பாக எழுப்பப்பட்ட இந்த 4 கேள்விகளுக்கும் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய்

எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார்.

அதில் அவர் அளித்துள்ள பதில்களின் விவரம்:

கேள்வி 1: கடந்த 2018ம் ஆண்டு முதலே ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. 2018ல் தீவிரவாத ஊடுருவல் சம்பவங்கள் 143 ஆக இருந்தது. 2019ல் இவை 141 ஆகவும் 2020ல் இவை 51 ஆகவும் குறைந்துள்ளன. 2021 அக்டோபர் 31 உடன் முடிவடைந்த காலத்தில் வெறும் 28 தீவிரவாத ஊடுருவல் சம்பவங்கள் தான் நடைபெற்றுள்ளன. தீவிரவாத தாக்குதல்களைப் பொருத்தவரையில் 2018 ஆம் ஆண்டில் 417 சம்பவங்களும், 2019 ஆம் ஆண்டு 255 சம்பவங்களும், 2020ல் 244 சம்பவங்களும், நவம்பர் 21 2021 வரை 200 சம்பவங்களும் நடைபெற்றுள்ளன என்று பதிலளித்துள்ளார்.

டிச.2020 முதல் நவ. 2021 வரை 14 தீவிரவாதிகள் கைது; 165 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்: மத்திய அரசு தகவல்

கேள்வி 2ல் மாதவாரியாக தீவிரவாத ஊடுருவல் மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் எத்தனை நடந்தன என்பது குறித்த கேள்விக்கு, அக்டோபர் 2020, 22 சம்பவங்கள், நவ 2020ல் 15, டிசம்பரில் 28, ஜனவரி 2021ல் 8, பிப்ரவரியில் 7, மார்ச்சில் 11, ஏப்ரலில் 12, மே மாதத்தில் 13, ஜூனில் 22, ஜூலையில் 26, ஆகஸ்டில் 36, செப்டம்பரில் 14, அக்டோர் 2021ல் 37 தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.

மூன்றாவதாக ஜம்மு, காஷ்மீர் காவல்துறை, துணை ராணுவப் படையினர் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்ற கேள்விக்கு, காவல்துறையில் 19 பேரும், துணை ராணுவப் படையில் 32 பேரும் இறந்ததாகக் கூறியுள்ளார்.

4வது கேள்வியாக கடந்த டிசம்பர் 2020 முதல் நவம்பர் 2021 வரை எத்தனை தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர், எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற கேள்விக்கு 14 பேர் கைது, 165 பேர் கொலை செய்யப்பட்டனர் என்று உள்துறை இணை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

”பாண்டி மெலாஞ்ச் 2027” புதுச்சேரி சுற்றுலாத்துறையின் கூட்டு முயற்சி - பிரமாண்ட கலாச்சார திருவிழா..!
”பாண்டி மெலாஞ்ச் 2027” புதுச்சேரி சுற்றுலாத்துறையின் கூட்டு முயற்சி - பிரமாண்ட கலாச்சார திருவிழா..!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
ரயில் டிக்கெட் வாங்குவோருக்கு புதிய மாற்றம்! அக்டோபர் 27 முதல் காப்பீடு கட்டாயம்?
ரயில் டிக்கெட் வாங்குவோருக்கு புதிய மாற்றம்! அக்டோபர் 27 முதல் காப்பீடு கட்டாயம்?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Embed widget