அது ஒரு கனா காலம்! எப்போதும் ப்ளூ கலர் டர்பன்தான் ஃபேவரைட்.. மன்மோகன் சிங் சுவாரஸ்யம்!
மன்மோகன் சிங் என்றாலே எல்லோருக்கும் நியாபகம் வருவது அவரது ப்ளூ கலர் டர்பன்தான். பொருளாதார ஆலோசகராக நாட்டுக்கு சேவை செய்ய தொடங்கியதில் இருந்து பிரதமராக பதவி வகித்தது வரை அதையே அணிந்து வந்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எங்கு சென்றாலும் நீல நிற டர்பன்தான் அணிந்துதான் செல்வார். இதற்கு பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யத்தை அவரே ஒரு முறை விளக்கியுள்ளார். அது என்ன என்பதை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
மன்மோகன் சிங்கின் கல்லூரி காலம்:
நவீன இந்திய பொருளாதாரத்தின் சிற்பியாக கருதப்படும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், திடீர் உடல்நல குறைவால் நேற்று மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவர், வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு ஆகியவற்றால் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு காலமானார். இதையடுத்து, இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் பல தலைவர்கள், அவரின் இழப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மன்மோகன் சிங் என்றாலே எல்லோருக்கும் நியாபகம் வருவது அவரது ப்ளூ கலர் டர்பன்தான். இந்திய அரசில் பொருளாதார ஆலோசகராக நாட்டுக்கு சேவை செய்ய தொடங்கியதில் இருந்து உச்சபட்ச பதவியான பிரதமராக பதவி வகித்தது வரை, ஏன் தனது கடைசி காலக்கட்டம் வரை ப்ளூ கலர் டர்பனையே அணிந்து வந்துள்ளார்.
ப்ளூ கலர் டர்பனை அணிவது ஏன்?
ப்ளூ கலர் டர்பனை அணிவது ஏன் என அவரே ஒரு முறை விளக்கியுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்ததை நினைவுகூரும் விதமாக தான் ப்ளூ கலர் டர்பனை அணிவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2006ஆம் ஆண்டு, சட்டத்தில் அவர் முனைவர் பட்டம் பெற்றார். அந்த பட்டமளிப்பு விழாவில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் மறைந்த எடின்பர்க் இளவரசருமான பிலிப், மன்மோகன் சிங்கின் நீல தலைப்பாகையை சுட்டிக்காட்டி வரவேற்பு அளித்தார்.
அதற்கு பதில் அளித்து பேசிய மன்மோகன் சிங், "நீல நிறம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அடிக்கடி என் தலையில் காணப்படுகிறது. கேம்பிரிட்ஜில் இருந்த எனது நினைவுகள் எனது மனதில் ஆழமாக பதிந்துள்ளது. கேம்பிரிட்ஜில் படிக்கும்போது எனது நண்பர்கள், என்னை ப்ளூ டர்பன் என அழைப்பார்கள்" என்றார்.
இதையும் படிக்க: Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!