மேலும் அறிய

Former Miss Kerala Ancy Kabeer | கேரள அழகிகளை பலி வாங்கிய ட்ரைவரின் மதுபோதை..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

கேரளாவை சேர்ந்த மாடல் அழகியும் அவரது தோழியும் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது

கேரளாவை சேர்ந்த மாடல் அழகியும் அவரது தோழியும் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அன்று நடந்த விபத்தின் போது, காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் குடித்து விட்டு வாகனத்தை ஓட்டியுள்ளார். அவருக்கு எடுக்கப்பட்ட இரத்த பரிசோதனையில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

முன்னதாக, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்கள் அன்சி கபீர் மற்றும் இவரது தோழி அஞ்சனா  ஷாஜன். இவர்கள் இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைப்பெற்ற கேரள அழகிப்போட்டியில் பங்கேற்றனர். அதில் அன்சி கபீர் முதலிடமும், அஞ்சனா இரண்டாம் இடமும் பிடித்தனர். அதன் பிறகு நடந்த தென்னிந்திய அழகிப்போட்டியில் பங்கேற்ற அன்சி கபீர் அதிலும் மகுடம் சூடினார். அன்சி மற்றும் அஞ்சனா இருவரும் மாடலிங் துறையில் கலக்கி வந்த நிலையில் , தங்களது ஆண் நண்பர்களுடன் இணைந்து ஃபோட்டோ ஷூட் நடத்த திட்டமிட்டதாக தெரிகிறது. 

Former Miss Kerala Ancy Kabeer | கேரள அழகிகளை பலி வாங்கிய ட்ரைவரின் மதுபோதை..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

அதன்படி தங்களுக்கு சொந்தமான ஃபோர்ட்  ஃபிகோ என்னும் காரில் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்றனர். அப்போது நிலை தடுமாறிய கார் அங்குள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே அன்சி மற்றும் அஞ்சனா ஆகிய இருவருமே உயிரிழந்தனர். மேலும் உடன் இருந்த மற்ற இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு , அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணையில்  ஈடுபட்டு வந்தனர். முதற்கட்டமாக அங்குள்ள பொதுமக்களிடம் நடத்திய விசாரணையில் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதாக தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில் இந்த விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.

Former Miss Kerala Ancy Kabeer | கேரள அழகிகளை பலி வாங்கிய ட்ரைவரின் மதுபோதை..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
அன்சி மற்றும் அஞ்சனா இருவருமே சமூக வலைத்தளங்கள் மிகுந்த ஆக்டிவாக இருப்பவர்கள். இந்த நிலையில் அன்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட இறுதி பதிவும் விபத்து நடந்த அன்றைய தினம் வைரலானது. அந்தப் பதிவில், தனது இறப்பை முன்பே கணித்தவர் போல , “இது போவதற்கான நேரம் “ என ஒரு காட்டுப்பகுதியில் அன்சி நடந்து செல்வது போன்ற வீடியோவை பகிர்ந்தார். திடிரென எதிர்பாராமல் நடந்த விபத்தால் உடைந்து போன அவரது தாய்  அதனை தாங்கிக்கொள்ள முடியாமல் விஷ மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்த குடும்பத்தினர் அவர் தற்போது நலமாக இருப்பதாக தெரிவித்தனர். 

View this post on Instagram
 
A post shared by Ansi Kabeer (@ansi_kabeer)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget