மேலும் அறிய

ஹிமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் காலமானார்..!

ஹிமாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 87 ஆகும்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் வீரபத்ர சிங். ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த அவர் அந்த மாநிலத்தின் தவிர்க்க முடியாத அரசியல்வாதியாக திகழ்ந்து வந்தவர். 87 வயதான இவர் தற்போது அந்த மாநிலத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள அர்கி என்ற சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதி அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், கொரோனா தொற்றில் இருந்து மீண்ட அவர் சிகிச்சை முடிந்து கடந்த ஏப்ரல் 23-ந் தேதி சிம்லா வந்தடைந்தார். ஆனாலும், அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட காரணத்தால் அவர் மீண்டும் சிம்லாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஹிமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் காலமானார்..!

இந்த நிலையில், அவருக்கு கடந்த மாதம் 11-ந் தேதி மீண்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையால், மீண்டும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டார். இருப்பினும் அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், வீரபத்ர சிங் இன்று அதிகாலை 3.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 87 வயதான வீரபத்ர சிங் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஹிமாச்சல பிரதேசத்தின் முதல்-அமைச்சராக 5 முறை பொறுப்பு வகித்தவர். 1983ம் ஆண்டு முதன்முறையாக முதல்வராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட வீரபத்ர சிங் 1985 ஏப்ரல் வரையும், பின்னர் 1985 முதல் 1990 வரையும், 1993ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரையும், 2003ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையும், 2012ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையும் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பு வகித்துள்ளார்.

ஹிமாச்சல பிரதேசத்தின் சட்டசபை உறுப்பினராக 9 முறை பதவி வகித்துள்ளார். 5 முறை எம்.பி.யாக பொறுப்பு வகித்துள்ளார். 1998ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை மாநில எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். வீரபத்ர சிங்கிற்கு பிரதீபா சிங் என்ற மனைவியும், விக்ரமாதித்ய சிங் என்ற மகனும், அபிலாஷா குமாரி என்ற மகளும் உள்ளனர்.

ஹிமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் காலமானார்..!

அவரது மனைவி பிரதீபா சிங் மாண்டி மக்களவை தொகுதியின் முன்னாள்  உறுப்பினர் ஆவார். அவரது மகன் விக்ரமாதித்ய சிங் சிம்லா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார், வீரபத்ர சிங் மறைவை முன்னிட்டு அந்த மாநிலத்தின் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மற்றும் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், காங்கிரஸ் தலைவர்கள் உள்பட நாட்டின் பல அரசியல் தலைவர்களும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 பேர் பலி; 16 பேரை காணவில்லை - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 பேர் பலி; 16 பேரை காணவில்லை - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
மாறி மாறி தூதுவிடும் ஓபிஎஸ்! - கண்டுகொள்வாரா இபிஎஸ்! - அதிமுகவின் புது வியூகம் எடுபடுமா?
மாறி மாறி தூதுவிடும் ஓபிஎஸ்! - கண்டுகொள்வாரா இபிஎஸ்! - அதிமுகவின் புது வியூகம் எடுபடுமா?
SVAMITVA: சொத்து - நிலப் பிரச்னைக்கு தீர்வு: ஸ்வமித்வா திட்டத்தை அறிமுகம் செய்த அரசு: திட்டம் சொல்வது என்ன?
சொத்து - நிலப் பிரச்னைக்கு தீர்வு: ஸ்வமித்வா திட்டத்தை அறிமுகம் செய்த அரசு: திட்டம் சொல்வது என்ன?
"குண்டும் குழியாக சாலை அமைத்தால் சிறை" கொதித்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கையை விரித்த கூட்டணியினர்! கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்! என்ன செய்யப் போகிறார் ராகுல்?BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 பேர் பலி; 16 பேரை காணவில்லை - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 பேர் பலி; 16 பேரை காணவில்லை - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
மாறி மாறி தூதுவிடும் ஓபிஎஸ்! - கண்டுகொள்வாரா இபிஎஸ்! - அதிமுகவின் புது வியூகம் எடுபடுமா?
மாறி மாறி தூதுவிடும் ஓபிஎஸ்! - கண்டுகொள்வாரா இபிஎஸ்! - அதிமுகவின் புது வியூகம் எடுபடுமா?
SVAMITVA: சொத்து - நிலப் பிரச்னைக்கு தீர்வு: ஸ்வமித்வா திட்டத்தை அறிமுகம் செய்த அரசு: திட்டம் சொல்வது என்ன?
சொத்து - நிலப் பிரச்னைக்கு தீர்வு: ஸ்வமித்வா திட்டத்தை அறிமுகம் செய்த அரசு: திட்டம் சொல்வது என்ன?
"குண்டும் குழியாக சாலை அமைத்தால் சிறை" கொதித்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி!
மாமனார் மருமகன் இடையே மோதல்; அம்மிக்கல்லில் விழுந்து உயிரிழந்த மாமனார் - சீர்காழியில் சோகம்
மாமனார் மருமகன் இடையே மோதல்; அம்மிக்கல்லில் விழுந்து உயிரிழந்த மாமனார் - சீர்காழியில் சோகம்
அடடே.. ஆசிரியர்களுக்கு இத்தனை நாட்கள் லீவா? யுஜிசி வரைவு அறிக்கை சொல்வது என்ன?
அடடே.. ஆசிரியர்களுக்கு இத்தனை நாட்கள் லீவா? யுஜிசி வரைவு அறிக்கை சொல்வது என்ன?
கரூர்: சட்டவிரோதமாக சேவல் சண்டை: 26 பேர் கைது! கட்டுக்கட்டாக சிக்கிய ரூபாய் நோட்டுகள்!
கரூர்: சட்டவிரோதமாக சேவல் சண்டை: 26 பேர் கைது! கட்டுக்கட்டாக சிக்கிய ரூபாய் நோட்டுகள்!
Suchitra on Ajith; அஜித்தை சீண்டிய சுசித்ரா... கொந்தளிக்கும் ரசிகர்கள்!! அப்படி என்ன சொன்னாங்க.?
அஜித்தை சீண்டிய சுசித்ரா... கொந்தளிக்கும் ரசிகர்கள்!! அப்படி என்ன சொன்னாங்க.?
Embed widget