மேலும் அறிய

Ayodhya Ram Temple: ஜொலி ஜொலிக்கும் தங்க கதவு! களைகட்டும் ராமர் கோயில் - வைரலாகும் புகைப்படங்கள்!

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கருவறைக்குள் செல்வதற்காக தங்க கதவு பொருத்தப்பட்டுள்ளது.

Ayodhya Ram Temple: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கருவறைக்குள் செல்வதற்காக  தங்க கதவு பொருத்தப்பட்டுள்ளது. 

அயோத்தி ராமர் கோயில்:

அயோத்தி விவகாரம் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. அயோத்தியில் மசூதி இருந்த நிலமானது, பகவான் ராம் லல்லாவுக்கு சொந்தம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இடிக்கப்பட்ட மசூதிக்கு பதிலாக இஸ்லாமியர்களுக்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, ராமர் கோயிலின் முதற்கட்ட கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. இதற்கிடையே, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது.  

கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். கோயில் கும்பாபிஷேகத்துக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.

பொருத்தப்பட்ட தங்க கதவு:

கும்பாபிஷேக ஏற்பாடு அங்கு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான், அயோத்தி ராமர் கோயில் கருவறையில் நுழைய தங்கத்தால் செய்யப்பட்ட கதவு பொருத்தப்பட்டுள்ளது. இந்த கதவின் போட்டோக்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. கதவில் யானைகளில் வடிவங்கள் பக்தர்களை கவரும் வகையில் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது  இணையத்தில் வெளியாகி உள்ளது. 

பாரம்பரிய முறையில் 3 அடுக்குகளாக கோயில் அமைய உள்ளது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது. கோயில் கிழக்கு மேற்காக 380 அடி நீளமும், 250  அடி அகலமும் கொண்டது. கோயிலில் மொத்த உயரம் 161 அடியாகும். இந்த ராமர் கோயில் மொத்தம் 392 தூண்கள், 44 கதவுகள் உள்ளன.

கோயில் தூண்கள் மற்றும் சுவர்கள் கலைநுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கோயில்களில்,நிருத்ய மண்டபம், ரங் மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனை மற்றும் கீர்த்தனை  என ஐந்து மண்டபங்கள் உள்ளன.

கோயிலில் மாற்றுத்திறனானளிகள் மற்றும் முதியவர்கள் வந்த செல்ல ஏதுவாக, சாய்தளங்கள், லிப்ட் வசதி அமைக்கப்படுகிறது. மேலும்,  அடுத்த மூன்று நாட்களுக்குள் ராமர் கோவிலில் கருவறையின் பெரிய அளவிலான வாயில் உட்பட 13 தங்க கதவுகள் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சபரிமலை மண்டல சீசன், பக்தர்களுக்கு புதிய இணையதளம் ! முழு வசதி விவரம் இதோ!
சபரிமலை மண்டல சீசன், பக்தர்களுக்கு புதிய இணையதளம் ! முழு வசதி விவரம் இதோ!
Vantara: நிற்க முடியாத நிலையில் குட்டியானை.. கேரளா டூ ஜாம்நகர்.. வந்தாராவில் உயர்தர சிகிச்சை!
Vantara: நிற்க முடியாத நிலையில் குட்டியானை.. கேரளா டூ ஜாம்நகர்.. வந்தாராவில் உயர்தர சிகிச்சை!
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
E-20 பெட்ரோலில் 31% வரை எத்தனால் கலப்பு? - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
சபரிமலை ஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக புதிய இணையதளம் அறிமுகம்! - எளிமையாகும் முன்பதிவு!
சபரிமலை ஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக புதிய இணையதளம் அறிமுகம்! - எளிமையாகும் முன்பதிவு!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali 2026 Wishes:
"வெறும் 'ஹேப்பி தீபாவளி' போரடிக்குதா? - இதோ சில டிஃபரண்டான வாழ்த்துச் செய்திகள்!" பிடிச்சவங்களுக்கு உடனே அனுப்புங்க அன்பை பெறுங்க
பெரியார் அறிவுலக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு நடுவே லஞ்ச ஒழிப்புத் துறையை நாடிய திமுக
பெரியார் அறிவுலக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு நடுவே லஞ்ச ஒழிப்புத் துறையை நாடிய திமுக
“கேமரா முன்னாடி கையசைச்சா மட்டும் போதாது” - பெரியார் அறிவுலக விவகாரத்தில் தவெக அரசை விளாசிய எடப்பாடி
“கேமரா முன்னாடி கையசைச்சா மட்டும் போதாது” - பெரியார் அறிவுலக விவகாரத்தில் தவெக அரசை விளாசிய எடப்பாடி
ஜெயிச்சும் சுப்மன் கில் அப்செட்? - நியூசிலாந்துக்கு எதிரான த்ரில் வெற்றிக்குப் பின் நடந்தது என்ன?
ஜெயிச்சும் சுப்மன் கில் அப்செட்? - நியூசிலாந்துக்கு எதிரான த்ரில் வெற்றிக்குப் பின் நடந்தது என்ன?
தீபாவளிக்கு கொட்டப்போகும் மழை? - எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை.. வானிலை வெளியிட்ட லிஸ்ட்
தீபாவளிக்கு கொட்டப்போகும் மழை? - எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை.. வானிலை வெளியிட்ட லிஸ்ட்
மேகதாது அணைக்கு செக் வைத்த தமிழ்நாடு - பிரதமர் மோடிக்கு முதல்வர் எழுதிய அதிரடிக் கடிதம்
மேகதாது அணைக்கு செக் வைத்த தமிழ்நாடு - பிரதமர் மோடிக்கு முதல்வர் எழுதிய அதிரடிக் கடிதம்
"திமுகவின் AI தில்லுமுல்லு" - பெரியார் அறிவுலக புத்தக ஊழலை உரித்துத் தொங்கவிட்ட ராஜ்மோகன்.. அதிர்ச்சி ஆதாரங்கள் வெளியீடு
மதுரை தீபாவளி: மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய விளக்குத்தூண்; 1000 போலீசார் குவிப்பு!
மதுரை தீபாவளி: மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய விளக்குத்தூண்; 1000 போலீசார் குவிப்பு!
Embed widget