மேலும் அறிய
News wrap : தலைமை தளபதி பிபின்ராவத் உடல் தகனம்..! பிரதமர், குடியரசுத்தலைவர் அஞ்சலி..! இன்றைய முக்கியச் செய்திகள்..
காலை முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 நபர்களின் குடும்பங்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தனியே இரங்கல் கடிதம்
- பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ஊட்டியில் கடைகள் அடைப்பு – நீலகிரி மாவட்டம் முழுவதும் அஞ்சலி
- முப்படைகளின் தலைமை தளபதி உயிரிழந்த விமான விபத்து குறித்து தமிழ்நாடு காவல்துறையின் விசாரணை தீவிரம்
- பிபின் ராவத் உடலுக்கு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட தி.மு.க. எம்.பி.க்கள் நேரில் அஞ்சலி
- விழுப்புரத்தில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நடத்துனர், உடந்தையாக இருந்த ஓட்டுனர் சஸ்பெண்ட்
- வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
- தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் தற்கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
இந்தியா :
- முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உடல் ஒரே மேடையில் தகனம்
- டெல்லி கண்டோன்மெண்ட் மயானத்தில் பீரங்கி குண்டுகள் முழங்க தகனம்
- பிபின் ராவத், மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு
- பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் நேரில் அஞ்சலி
- டெல்லியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி
- டெல்லியில் பிரிகேடியர் லிடருக்கு இறுதிச்சடங்குகள்
- ஹெலிகாப்டர் விபத்து குறித்து வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் – இந்திய விமானப்படை
- பிபின் ராவத் உள்ளிட்டோர் உடலுக்கு ராகுல்காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேரில் அஞ்சலி
- ராஜஸ்தானில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 9 பேரும் குணம் அடைந்தனர்
உலகம் :
- மணிக்கு 360 கி.மீ. செல்லும் அதிவேக மின்சார ரயில்கள் தயாரிக்க ஜெர்மன், பிரான்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இங்கிலாந்து திட்டம்
- கருந்துளை குறித்து ஆய்வு செய்ய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் புதிய செயற்கை கோளை விண்ணுக்கு ஏவியது நாசா
- மெக்சிகோ நாட்டில் லாரி கவிழ்ந்த விபத்தில் 53 அகதிகள் பரிதாபமாக உயிரிழப்பு
- சிங்கப்பூரில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் ஒமைக்ரான் பாதிப்பு
விளையாட்டு :
- பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து நிதான ஆட்டம்
- ஆஷஸ் முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் ஜோ ரூட், டேவிட் மலான் அபார ஆட்டம்
- தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றது தமிழகம்
- எனக்கு பயிற்சியாளர் பதவியை அளிக்கவிடாமல் பலர் தடுத்தனர் – ரவிசாஸ்திரி
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஆன்மிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion