(Source: ECI/ABP News/ABP Majha)
Devendra Fadnavis: சூட்டோடு சூடாக முதல்வர் பொறுப்பேற்கும் தேவேந்திர பட்னாவிஸ்: இன்று இரவே பாஜக ஆட்சி?
மகாராஷ்ட்ராவின் முதல்வராக மூன்றாவது முறையாக தேவேந்திர பட்னாவிஸ் இன்று இரவு பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மகாராஷ்ட்ராவில் ஆட்சியில் இருந்த சிவசேனா கட்சிக்கு அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத்ஷிண்டே தலைமையில் அதிருப்தி தெரிவித்ததால், அந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் தலைவரான ஏக்நாத் ஷிண்டே முன்னாள் முதல்வரும், பா.ஜ.க. தலைவருமான தேவேந்திர பட்னாவிசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.க. தலைமையில் ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, மகாராஷ்ட்ராவின் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பொறுப்பு ஏற்க உள்ளார். இதற்காக அம்மாநில ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இதையடுத்து, அவர் இன்று இரவு 7.30 மணியளவில் மகராஷ்ட்ராவின் முதல்வராக மூன்றாவது முறையாக பொறுப்பு ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே இருவரும் இணைந்து மகாராஷ்ட்ரா ஆளுநரான பகத்சிங் கோஷ்யாரியை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். அவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க.வின் 106 எம்.எல்.ஏ.க்கள், சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 40 பேர், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் என்று 156 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை நேரில் வழங்கினர்.
அந்த கடிதத்தை பெற்றுக்கொண்ட ஆளுநர், மகாராஷ்ட்ரா மாநில முதல்வராக பொறுப்பு ஏற்க தேவேந்திர பட்னாவிசுக்கு ஆளுநர் அழைப்பு விடுக்க உள்ளார். அவரது அழைப்புக்கு பிறகு தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பு ஏற்க உள்ளார். அவர் ஏற்கனவே 2014-2019ம் ஆண்டு வரை முதல்வராக பொறுப்பு வகித்தார். 2019ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க. ஆட்சியை அமைத்தது. ஆனால், பெரும்பான்மை இல்லாததால் 5 நாட்களில் தேவேந்திர பட்னாவிஸ் தன்னுடைய முதல்வர் பதவியை பறிகொடுத்தார்.
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மகாராஷ்ட்ராவில் இருந்து நாற்காலியில் இருந்து கீழே இறக்கியுள்ளனர். மகாராஷ்ட்ராவில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த பரபரப்பான அரசியல் சூழல் தற்போது தேவேந்திர பட்னாவிசுக்கு சாதகமாக முடிந்துள்ளது.
மேலும் படிக்க : Manipur Landslide : மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு...! மாயமானவர்களை மீட்கும் பணி தீவிரம்..!
மேலும் படிக்க : Kangana Ranaut: சிவனால் கூட சிவசேனாவை காப்பாற்ற முடியாது.. சான்ஸ் கிடைத்ததும் கொண்டாடிய கங்கனா..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்