(Source: ECI/ABP News/ABP Majha)
Akasa Flight :பறவை மோதி சேதமடைந்த பட்ஜெட் விமானம் ஆகாசா ! விவரம் உள்ளே..
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் அகமதாபாத்தில் இருந்து பெங்களூருக்கு செல்லவேண்டிய ஆகாசா ஏர் விமானம் தொழில்நுட்ப காரணங்களால் ரத்து செய்யப்பட்டது
டெல்லியை நோக்கி பறந்த ஆகாசா ஏர் விமானம் பறவை மோதி சேதமடைந்ததாக இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
சமீபத்தில் துவங்கப்பட்ட பட்ஜெட் ஏர் விமானமானங்களுள் ஒன்றான ஆகாசா பி-737-8(மேக்ஸ்) விமானம் VT-YAF இயக்க விமானம் QP-1333 இன்று காலை அகமதாபாத்தில் இருந்து டெல்லிக்கு பறந்தது 1900 அடி உயரத்தில் பறந்த பொழுது பறவை ஒன்று விமானத்தில் மோதியது. இதனையடுத்து டெல்லியில் தரையிறங்கியதும் ரேடோம் சேதம் அடைந்ததாக சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. சேதத்தை சரி செய்த பிறகு அந்த விமான மீண்டும் அடுத்த இலக்கை நோக்கி பறக்க துவங்கும். இந்த சம்பவம் விமான தரம் குறித்த சந்தேகத்தை பயணிகள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
Today, Akasa B-737-8(Max) aircraft VT-YAF operating flight QP-1333 (Ahmedabad-Delhi) experienced a bird strike during the climb out passing 1900ft. Post landing at Delhi, Radome damage was observed. Aircraft declared AOG (Aircraft on ground) at Delhi: DGCA pic.twitter.com/9pODQdDJH7
— ANI (@ANI) October 27, 2022
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் அகமதாபாத்தில் இருந்து பெங்களூருக்கு செல்ல வேண்டிய ஆகாசா ஏர் விமானம் தொழில்நுட்ப காரணங்களால் ரத்து செய்யப்பட்டது, இதன் விளைவாக விமானத்தின் செக்-இன் கவுண்டர்களில் குழப்பம் ஏற்பட்டது. ஆகாசா ஏர் க்யூபி 1332 விமானம் இரவு 9.55 மணிக்குப் புறப்பட திட்டமிடப்பட்ட நிலையில் இரவு 10.55 மணிக்கு நேரம் மாற்றியமைக்கப்பட்டது. இதற்கிடையில் பயணிகள் “ எங்களை அதே நாளில் அழைத்துச்செல்வதாக விமான நிர்வாகம் உறுதியளித்தது. ஆனால் அடுத்த நாள் வரை எங்களை காத்திருக்க வைத்தனர் . இல்லையென்றால் உங்களது பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என கூறினார்கள் . மேலும் உணவு , தங்கும் வசதி எதுவும் ஏற்படுத்திக்கொடுக்கவில்லை“ என குற்றம் சாட்டினர்.
ஆகாசா ஏரின் முதல் வணிக விமானம் கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வினய் துபே. முன்னதாக தங்களது விமானத்தில் பயணியரின் வேண்டுகோளை ஏற்று, நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை விமானங்களில் எடுத்துச் செல்லும் சேவையை வருகிற நவம்பர் மாதம் துவங்க இருப்பதாக தெரிவித்திருந்தார். அதிகபட்சமாக 7 கிலோ வரை எடையுள்ள செல்லப் பிராணிகளை தங்களுடனேயே பயணியர் எடுத்துச் செல்லலாம். அதற்கு மேல் எடையில் இருக்கும் செல்லப்பிராணிகளை கார்கோ விமானத்தில் எடுத்துவர முடியும் என்றார். கார்கோவில் கிட்டத்தட்ட 32 கிலோ எடை வரையில் செல்ல பிராணிகளை எடுத்துச்செல்ல முடியும் .