Crime : மும்பையில் அதிர்ச்சி... விடுதியின் 5-வது மாடியில் இருந்து 3 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு...
மும்பையில் விடுதியின் 5-வது மாடியில் இருந்து 3 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
உலக கோப்பை கால்பந்து போட்டி திரையிடப்பட்ட மும்பை விடுதியில் 5-வது மாடியில் இருந்து 3 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை காண்பதற்காக ஆங்காங்கே திரை அமைக்கப்பட்டு இருந்தன. அந்த வகையில் மும்பை சர்ச்கேட் பகுதியில் வான்கடே மைதானம் அருகில் கர்வாரே கிளப் ஹவுசில் உலக கோப்பை கால்பந்து போட்டி காட்சி பெரிய திரையில் திரையிடப்பட்டது. போட்டியை காண மும்பை பரேல் பகுதியை சேர்ந்த அவ்னிஷ் ரதோட், தனது 3 வயது மகன் ஹிரித்யான்ஷ் மற்றும் குடும்பத்துடன் சென்று இருந்தார். கால்பந்து போட்டி 6-வது தளத்தில் உள்ள மொட்டை மாடியில் திரையிடப்பட்டது.
போட்டியின் இடையே சிறுவன் ஹிரித்யான்ஷ், மற்றொரு 10 வயது சிறுவனுடன் 5-வது மாடியில் உள்ள கழிவறைக்கு சென்று திரும்பினான். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் ஹிரித்யான்ஷ் படிக்கட்டில் இருந்து தவறி தரை தளத்தில் விழுந்தான். மாடிப்படியில் உள்ள தடுப்பு ஒரு இடத்தில் உடைந்து இருந்துள்ளது. அந்த இடைவெளி வழியாக சிறுவன் தவறி தரை தளத்தில் விழுந்தார்.
Mumbai: A 3-year-old boy died after falling from 5th floor of Garware Club where he had gone with his parents to watch FIFA World Cup final. Case registered under ADR(Accidental Death Report).Family of boy alleged negligence on part of club management.Probe on:Marine Drive Police
— ANI (@ANI) December 20, 2022
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த 10 வயது சிறுவன் ஓடிச்சென்று கால்பந்து போட்டி பார்த்து கொண்டு இருந்த பெற்றோரிடம் கூறினான். உடனடியாக அவர்கள் ஹிரித்யான்சை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தலை மற்றும் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மாடிப்படி இடைவெளி வழியாக 5-வது மாடியில் இருந்து விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க
பில் இருக்கிறதா? இல்லையா? என்று கேட்டால்.. அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்